பாராலிம்பிக் போட்டியில் மீண்டும் பதக்கம் வென்றார் மாரியப்பன் தங்கவேலு

 


       பாராலிம்பிக் போட்டியில் மீண்டும் பதக்கம் வென்றார் மாரியப்பன் தங்கவேலு


பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் 2 வது முறையாக பதக்கம் வென்று மாரியப்பன் தங்கவேலு அசத்தல்


 டோக்கியோ பாராலிம்பிக்ஸ் உயரம் தாண்டுதலில் வெள்ளி, வெண்கலப் பதக்கம் வென்ற மாரியப்பன், சரத் குமாருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து


 டோக்கியோ பாராலிம்பிக்: உயரம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்றார் தமிழக வீரர் மாரியப்பன்


 பாராலிம்பிக்சில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து.


 பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு ரூ.2 கோடி ஊக்கப்பரிசு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


ஏழ்மையான வாழ்வையும், சவாலான உடல்நிலையையும் சளைக்காத தன் திறமையால் மாரியப்பன் வென்றுள்ளார் என்று முதல்வர் பாராட்டியுள்ளார். மாரியப்பன் சாதனையால் இந்தியாவும் தமிழ்நாடும் பெருமை கொள்கிறது என்று முதல்வர் கூறியுள்ளார்.       🙏மாரியப்பன் தங்கவேலுவிற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்  சீமான் வாழ்த்து. 


வெள்ளியை வென்று, தன்னம்பிக்கைக்கும், தனித்திறனுக்கும் சான்றாக உயர்ந்து நிற்கும் தம்பிக்கு எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.


நிருபர் பாலாஜி