ஒரு வரி செய்தி துளிகள்

 


       👮திண்டுக்கல் பட்டிவீரன்பட்டி  அருகே சிங்காரகோட்டை பகுதியில் பெண்ணிடம் 4பவுன் தங்க சங்கிலியை பறித்து தப்பிச்சென்ற 3 வாலிபர்களை மேலே உள்ள படத்தில் காணலாம்.இவர்கள் பற்றிய தகவல் தெரிந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவும்.      🙏  நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன்.*

நான் நடித்தசத்ரியன் திரைப்படத்தை, எனது சிகிச்சைக்கு உதவிபுரியும் செவிலியர் சகோதரிகளுடன் பார்த்த போது எடுத்த படம்"


விஜயகாந்த், தேமுதிக பொதுச்செயலாளர்


       🙏ஆசிரியர் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து


* ஆசிரியப்பணி என்பது கல்வியைப் புகட்டுவதோடு, மனிதர்களை, அதுவும் மாமனிதர்களை உருவாக்கும் அறப்பணி - முதலமைச்சர்


       🙏தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியர்களுக்கு தேசிய 'நல்லாசிரியர்' விருதை காணொலி வாயிலாக வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்


       👉காவலர் தற்கொலைக்கு பணிச்சுமை  மட்டுமே காரணம் இல்லை; அவர்களும் மனிதர்கள் தான்,  தற்கொலைக்கு குடும்பப் பிரச்னை உள்ளிட்ட பல காரணங்கள் இருக்கலாம், பணிச்சுமை என கூறி அரசை குற்றம்சாட்டுவது சரியல்ல” 


-அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்.


       👉1 முதல் 8ம் வகுப்பு பள்ளிகள் திறப்பு? முதல்வருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ்


       🙏என் அன்புக்குரிய மனைவி விஜயலட்சுமி மறைவுக்கு நேரிலும், தொலைபேசியிலும், கடிதம் வாயிலாகவும், சமூக ஊடகங்கள் மூலமும் ஆறுதல் தெரிவித்த அனைவருக்கும் நன்றி” 


- அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்.


       🙏பாராலிம்பிக்கில் பதக்கம் வெல்ல ஆதரவளித்து உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி; அடுத்து வரும் பாராலிம்பிக் போட்டியில் நிச்சயம் தங்கம் வெல்வேன்”


- பாராலிம்பிக்கில் வெள்ளி வென்ற மாரியப்பன் பேட்டி.


😷முக கவசம் உயிர்க்கவசம்😷