இருவரி செய்தித்துளிகள்

 


        💢கருப்பானவர்கள் அழகானவர்கள் இல்லை என்ற எண்ணம் இங்கு நம்மில் பலருக்கு உண்டு.


பரட்டை, சுருட்டை, குட்டை என்ற கேலிக்கு ஆளாகி நானே பலமுறை மீம்ஸ்க்கு உள்ளாகியிருக்கிறேன்.


ஆனால் தல வரலாற்றில் கருப்பு அழகின் வெளிப்பாடாக பாடப்பட்டுள்ளது.”


- ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்


    

          💢 காதலுக்கு கண்ணில்லை' காதலியுடன் ஃபோன் பேசியபடி நடந்து கிணற்றில் விழுந்த இளைஞர்.


நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் நடந்த சம்பவம்


        💢கடலூரில் கள்ளக்காதலை தட்டி கேட்டதால் ஆத்திரம் - கணவரை மண்வெட்டியால் அடித்துக் கொன்ற மனைவி


        💢ஆப்கன் தலைநகர் காபூலில் அரசு பணிகளில் பெண்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


மொத்தமுள்ள 2,000 ஊழியர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் பெண்கள்.


-காபூல் மேயர் நுமானி


        💢🙏பஞ்சாப்பின் புதிய முதல்வர் சரண்ஜித் சிங்*


பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி தேர்வு


கேப்டன் அமரீந்தர் சிங் நேற்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் புதிய முதல்வர் தேர்வு        💢🙏ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் பொதுமக்கள்


 மத்திய அரசு கூடுதல் தடுப்பூசிகளை வழங்க வேண்டும்


 கோவாக்சின் தடுப்பூசி போதுமான அளவு வரவில்லை


 அனைவருக்கும் கோவிஷீல்டு தடுப்பூசி தான் தற்போது போடப்படுகிறது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்


        💢சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூரில் வீட்டின் அருகே சிறுநீர் கழித்தவரை உருட்டு கட்டையால் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு போலீஸ் விசாரணை.


        💢விமான நிறுவனங்கள் 80% பயண சேவைகளை வழங்கலாம் - மத்திய அரசு அனுமதி        💢தமிழகத்தில் பாஜக ஆட்சி செய்ய முடியாது'


தமிழகத்தில் பாஜக ஒருபோதும் ஆட்சி செய்ய முடியாது - விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்


தமிழகத்தில் இனி பாஜகவின் ஆட்சி தான் என்ற அண்ணாமலையின் பேச்சுக்கு திருமாவளவன் பதில்


        👊👮கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 7 வயது சிறுமியை அடித்து கொன்று ஆற்றில் வீசிய கள்ளக்காதலனை பிடித்து தஞ்சை கிழக்கு போலீசார் விசாரணை.        💢🙏என்றைக்கு இந்தியாவில் வகுப்பறைகள் வணிக அறைகளாக மாறியதோ அன்றைக்கே இந்தியாவில் படிப்பறிவு பாதிக்கப்பட்டுவிட்டது


- சீமான், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர்.        💢பொதுமக்கள் பத்திரப்பதிவுக்கு நீண்ட தூரம் போவதை தவிர்க்கும் வகையில் 2- 3 கி.மீக்கு ஒரு பத்திரப்பதிவு அலுவலகம் திறக்க முடிவு


- பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி பேட்டி.        👊👮பதவி ஏலம் - கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'


ஊராட்சி மன்ற தலைவர் பதவிகள் ஏலம் விடப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ரகுபதி        👮ஈரோடு: அந்தியூர் அருகே பர்கூரில் அரசால் தடை செய்யப்பட்ட 800 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் இருந்து கோவைக்கு கடத்த முயன்ற குட்காவை கைப்பற்றி பர்கூர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குட்கா கடத்தலில் ஈடுபட்ட ஓட்டுனர் மோகித், செல்வராஜ் ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடைபெறுகிறது.    சீனாவின் Zaozhuang மாகாணத்தில் உள்ள வானவில் நிற சாலை!


😷முக கவசம் உயிர்க்கவசம்😷