பாராலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பிரமோத் பகத் தங்கப்பதக்கம் வென்றார்.

 


     டோக்கியோ பாராலிம்பிக் பார பேட்மிண்டன் போட்டியில்  ஆடவருக்கான எஸ்.எல் 3 பிரிவில் இந்தியாவின் பிரமோத் பகத் தங்கப்பதக்கம் வென்றார்.


 பாரா ஒலிம்பிக் தொடரின் பேட்மிண்டன் பிரிவில் இந்திய வீரர்கள் 2 பதக்கங்களை வென்று சாதனை.


பாரா ஒலிம்பிக் பேட்மிண்டன் பிரிவிலும் இந்திய அணிக்கு 2 பதக்கங்கள் கிடைத்துள்ளது. ஆடவர் பேட்மிண்டன் பிரிவில் இறுதிப்போட்டி  நடைபெற்றது. இதில் இந்தியாவின் பிரமோத் பாகட், இங்கிலாந்தின் டேனியல் பெதெல்லை எதிர்கொண்டார்.



இந்த போட்டியின் தொடக்கம் முதலே பிரமோத்தின் ஆதிக்கமே இருந்தது. இதனால் முதல் செட்டை 21 - 14 என்ற புள்ளிக்கணக்கில் வென்றார். 2வது சுற்றில் சுதாரித்துக்கொண்ட டேனியல் பெத்தெல், 4 - 11 என்ற புள்ளிக்கணக்கில் முதலில் முன்னிலை வகித்தார். ஆனால் கடுமையாக போராடிய பிரமோத் 2வது செட்டின் இறுதியில் 17 - 15 என்ற புள்ளிக்கணக்கில் வென்றார். இதனால் 21 - 14, 17 - 15 என்ற நேர் செட் கணக்கில் அவர் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.

  

மேலும் அதே பிரிவில் இந்தியாவின் மனோஜ் சர்கார் வெண்கலப்பதக்கத்தை வென்றார். அதைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற ஆடவர் எஸ்.எல் 4 பிரிவு பாரா பேட்மிண்டன் அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்று சுஹேஷ் யேத்திராஜ் இறுதி போட்டிக்கு முன்னேறியிருந்தார்.


இந்நிலையில் சுஹேஷ் யேத்திராஜ்  அவர் இறுதி போட்டியில் இந்த பிரிவில் உலக தரவரிசையில் நம்பர் ஒன் வீரரான பிரான்சு நாட்டின் லூகாஸை எதிர்த்து விளையாடினார். சுஹேஷ் யேத்திராஜ் 20 நிமிடங்கள் நடைபெற்ற முதல் கேமை 21-15 என்ற கணக்கில் வென்று 1-0 என முன்னிலை பெற்றார்.


இரண்டாவது சுற்றில் பிரான்சு வீரர் லூகாஸ் 21-17 என்ற கணக்கில் வென்று 1-1 என சமம் செய்தார். இதனால் போட்டியின் வெற்றியாளரை தீர்மானிக்க மூன்றாவது கேம் நடத்தப்பட்டது. அதிலும் இரு வீரர்களும் சிறப்பாக விளையாடினார்கள். இறுதியில் பிரான்சு வீரர் லூகாஸ் 21-15 என்ற கணக்கில் வென்றார். அத்துடன் தங்கப்பதக்கத்தை வென்றார். இந்திய வீரர் சுஹேஷ் யேத்திராஜ் வெள்ளிப்பதக்கம் வென்றார். டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியாவிற்கு 8ஆவது வெள்ளிப்பதக்கமாகும்.


துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்திய வீரர்கள் 2 பதக்கங்களை தட்டிச்சென்ற நிலையில் (04-09-21)அன்று மதியமே பேட்மிண்டன் போட்டியிலும் இந்திய வீரர்கள் 2 பதக்கங்களை வென்றுள்ளனர்.  மேலும் இந்தியாவுக்கு 2 தங்கப்பதக்கங்கள் கிடைத்துள்ளது. இதன் மூலம் பதக்கப்பட்டியலில், 4 தங்கம், 7 வெள்ளி, 6 வெண்கலம் என 17 பதக்கங்களுடன் இந்தியா 25வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.



குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தங்கம் வென்ற பிரமோத் பகத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். உலக மேடையில் இந்தியாவின் தேசிய கீதம் ஒலிப்பது இந்தியர்களுக்கும் மிகவும் பெருமிதமான தருணம் எனவும் அவர் கூறியுள்ளார்.


ஒட்டுமொத்த தேசத்தின் இதயங்களை வென்றுள்ளார் பிரமோத் பகத் - பிரதமர் மோடி பாராட்டு.


😷முக கவசம் உயிர்க்கவசம்😷