பெரியார் பிறந்த நாள் சமூக நீதி நாளாக கொண்டாடப்படுகிறது முதல்வர்

 


          பெரியார் பிறந்த நாள் சமூக நீதி நாளாக கொண்டாடப்படுகிறது


பெரியாரின் 143 ஆவது பிறந்தநாள்  கொண்டாடப்படுகிறது


சென்னை அண்ணா சாலையில் பெரியாரின் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மலர்த் தூவி மரியாதை


 பெரியார் பிறந்தநாளையொட்டி தமிழக அரசு சார்பில் முதல் முறையாக இன்று தலைமைச் செயலகம் மற்றும் அனைத்து அலுவலகங்களிலும் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு


 பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியை எனது வாழ்வியல் வழிமுறையாக கடைபிடிப்பேன் என்று சமூக நீதி நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிமொழி ஏற்றார். சமூகநீதியை அடித்தளமாக கொண்ட சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்த நாளில் உறுதி ஏற்கிறேன் என்றும் முதல்வர் குறிப்பிட்டார். 

 

பெரியாரின் 143வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள அவரது சிலைக்கு அதிமுகவினர் மரியாதை செலுத்தினர். தந்தை பெரியாரின் சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த படத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.


சேலம் நான்கு ரோடு பகுதியில் எம்.பி. அலுவலகம் முன்பு வைக்கப்பட்டுள்ள 40 அடி உயர  பெரியார் கட் அவுட்டுக்கு திமுகவினர் பாலாபிஷேகம்.எவரும் எவருக்கும் தாழ்ந்தவரும் இல்லை; உயர்ந்தவரும் இல்லை. பிறப்பால் அனைவரும் சமமே என்று சிந்தனைப் புரட்சியை விதைத்த, சமூக நீதியின் அடையாளமான தந்தை பெரியாரின் பிறந்தநாளான இன்று-

கனிமொழி எம்.பி ட்விட்டர் பதிவு