சென்னை: பொறியியல் பட்டதாரி ஆக வேண்டும் என்ற மாணவர்களின் கனவு நிறைவேறும் நாள் இன்று என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பி.இ. மாணவர் சேர்க்கை ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், பொறியியல் படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 உள்இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. திராவிட இயக்கத்தின் நோக்கமே அனைவருக்கும் கல்வி என்பதே. படிப்பு, படிப்பு, படிப்பு என்ற ஒன்றே உங்களின் குறிக்கோளாக இருக்க வேண்டும்.
அரசுப் பள்ளிகளில் பயின்று 7.5 சதவித உள்ஒதுக்கீட்டில் பயிலும் மாணவர்களின் கல்விக்கட்டணம், விடுதிக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

 
 
 
 
