சிங்காரச் சென்னை 2.0 தூய்மைசெயல்பாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்

 


      சிங்காரச் சென்னை 2.0 தூய்மை பணிகளுக்காக ரூ 36.52 கோடி மதிப்பில் பேட்டரியால் இயங்கும்  1684 மூன்று சக்கர வாகனங்கள், 15 கம்பாக்டர் இயந்திரங்களின் செயல்பாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.


மாநகராட்சி வளாகத்திற்குள் வந்ததும் என் நினைவுகள் 1996க்கு சென்று விட்டது


இந்த சாலை வழியே பயணம் செய்யும் போதெல்லாம் ரிப்பன் மாளிகையை பார்த்துக் கொண்டேதான் செல்வேன்


 அதன் பின் நடந்த உள்ளாட்சித் தேர்தலில், மக்கள் வாக்குகளைப் பெற்று தேர்வான முதல் மேயராக நான் பொறுப்பேற்றேன். அந்தவகையில், அழைப்பிதழில் ரிப்பன் மாளிகை படத்தைப் பார்த்து கொண்டிருந்த கருணாநிதி, 'எல்லாரும் சேர்ந்து செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் ஒரு சிறிய அறையில் உன்னை உட்கார வைக்கப் பார்த்தார்கள். நான் இவ்வளவு பெரிய கட்டிடத்தில் உன்னை உட்கார வைத்திருக்கிறேன்' என்று பெருமையுடன் கூறினார். அவ்வளவு சிறப்புமிக்க கட்டிடம்தான் இந்த ரிப்பன் மாளிகை.


ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை


😷முகக் கவசம் உயிர்க்கவசம்😷