நவம்பர் 1-ஆம் தேதி முதல் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையில் பள்ளி திறக்கப்படும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்

 


       நவம்பர் 1-ஆம் தேதி முதல் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையில் பள்ளி திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கும் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 


மருத்துவ நிபுணர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்களின் கருத்தின் அடிப்படையில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்..


 முதல்வர் மு.க ஸ்டாலின் இது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஏற்கனவே 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையில் பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது.


 தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அக்டோபர் 31 வரை நீட்டிப்பு


வழிபாட்டு தளங்களைப் பொறுத்தவரை ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தொடரும். வெள்ளி சனி மற்றும் ஞாயிறு ஆகிய 3 நாட்களும் வழிபாட்டுத்தலங்கள் மூடப்பட்டிருக்கும் - தமிழக அரசு அறிவிப்பு.


சர்வதேச வணிக விமான சேவைகளுக்கான தடையை அக்டோபர் 31 வரை நீட்டித்து விமான போக்குவரத்து ஆணையர் உத்தரவு