அப்துல் கலாம் மணி மண்டபம் திறப்பு

 


    ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் 18 மாதங்களுக்கு பிறகு அப்துல் கலாம் தேசிய நினைவகம் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் பார்வையிட அப்துல் கலாம் மணி மண்டபம் திறக்கப்பட்டுள்ளது. 


கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மூடப்பட்டிருந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் தேசிய நினைவகம் 525 நாட்களுக்கு பின் இன்று காலை பொதுமக்கள் பார்வையிட திறக்கப்பட்டது.