மதுரை: வணிகரிடம் ரூ.10 லட்சத்தை பறித்த வழக்கு - தலைமறைவாக இருந்த பெண் காவல் ஆய்வாளர் கைது
மதுரையில் வியாபாரியிடம் பணம் பறித்த வழக்கில் பெண் ஆய்வாளர் வசந்திக்கு செப்டம்பர் 9ம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. ரூ.10 லட்சம் பணம் பறித்த வழக்கில் ஆய்வாளர் வசந்தியை நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.