ஒரு வரிச் செய்திகள்

 


 

         ஒரு  வரி செய்திகள்

               *****************

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஒரு மாதத்திற்கு மேலாகப் பரவி வரும் காட்டுத்தீ குடியிருப்பு பகுதிகளை நெருங்கியதால் ஏராளமானோர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர்.


* * ** 


ஆப்கானிஸ்தானில் நிலவும் கடும் அரசியல் நெருக்கடியை அடுத்து இந்தியா முழுவதும் உச்சக்கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை சுகந்திர தின விழாவையொட்டி இந்தியா முழுவதும் தீவிர கண்காணிப்பு எச்சரிக்கை கடைபிடிக்கப்பட்டுள்ளது.


* * ** 


சுதந்திர தினத்திற்கு முந்தைய நாளான ஆகஸ்ட் 14ஆம் தேதி, பிரிவினை பேரச்ச நினைவு தினமாக அனுசரிக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


* * ** 


இந்துக் கோவில்களுக்கு 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் மாடுகளை இறைச்சிக்காக கொல்வதையும், மாட்டிறைச்சி விற்பனையையும் தடை செய்வது உள்ளிட்ட அம்சங்கள் அடங்கிய புதிய கால்நடை பாதுகாப்பு மசோதோ, அசாம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.


* * ** 


2021ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல் துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்கள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.


* * ** 


75வது சுதந்திர தினத்தையொட்டி உலகம் முழுவதிலும் உள்ள புகழ்பெற்ற கட்டிடங்கள், சுற்றுலா தலங்கள் உள்ளிட்டவைகளில் இந்திய கொடி மூவர்ணத்தில் ஒளிர மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.


* * ** 


தென்மேற்குப் பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனத்தால் இன்று நீலகிரி மாவட்டத்தில் கனமழையும், கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


* * ** 


பனை மரத்தினை, வேரோடு வெட்டி விற்கவும், தவிர்க்க முடியாத சூழ்நிலையில் பனைமரங்களை வெட்ட நேரும் நிகழ்வுகளில், மாவட்ட ஆட்சியர் அனுமதி பெற வேண்டியது கட்டாயமாக்கப்படும் என்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.


* * ** 


சுதந்திர தினத்தையொட்டி பாம்பன் பாக்ஜலசந்தி, மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


* * ** 


ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெற இருக்கும் ஆண்களுக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் ஒவ்வொரு அணிகளும் 15 வீரர்களுடன் கலந்து கொள்ள ஐசிசி அனுமதி அளித்துள்ளது.


 * * **