இரு வரி செய்திகள்

 


    👉 டெல்லி: அரசு சொத்துக்களை குத்தகைக்கு விடுவதற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். நாட்டின் சொத்துக்கள் அனைத்தையும் பிரதமர் நரேந்திர மோடி விற்றுவிட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். 70 ஆண்டுகளாக இந்தியா சேர்ந்த சொத்துக்களை ஏழே ஆண்டுகளில் பிரதமர் மோடி விற்றுவிட்டார் என் அவர் கூறியுள்ளார்.


    👉மதுரை: மதுரை - செங்கோட்டை இடையே வரும் 30ம் தேதி முதல் முன் பதிவில்லாத சிறப்பு ரயில்களை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதுரை - செங்கோட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே ஆகஸ்ட் 30ம் தேதி முதல் முன் பதிவில்லாத சிறப்பு ரயில்களை இயக்க மதுரை கோட்ட தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.


    👉கோவை: கோவை மாவட்டம் வெள்ளனைப்பட்டி கிராமத்தில் பட்டா பெயர் மாற்றத்திற்கு ரூ.3,500 லஞ்சம் பெற்றதாக கிராம நிர்வாக அலுவலர் குமார் கைது செய்யப்பட்டுள்ளார். லஞ்சம் பெற்றதாக அளிக்கப்பட்ட புகாரில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.


    👉திருப்பூர்: காங்கேயம் அருகே அரிசி ஆலை உரிமையாளர் மகனை கடத்திய வழக்கில் 5-வது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ரூ.3 கோடி கொடுத்து சிவபிரதீப் மீட்கப்பட்ட வழக்கில் 4 பேர் கைதான நிலையில் சையத் என்பவரும் சிக்கினார்.


    👉சென்னை: சென்னை வியாசர்பாடி ஜெ.ஜெ.ஆர். நகரில் பழிக்குப் பழியாக ரவுடி கொல்லப்பட்ட வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரவுடி ஹரியை வெட்டிக்கொன்ற சந்தோஷ், பிரவீன் அஜித், சங்கர், வாசு, சஞ்சய், கணேஷ், குமார் ஆகியோர் கைதாகி உள்ளனர்.


    👉சென்னை: பணிக்கு செல்லும் பெண்களுக்கு இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்துக்கு வரவேற்பு இல்லை என்று பேரவையில் அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளார். திட்டத்தின் கீழ் கோரிக்கை மனு எதுவும் வரவில்லை. பெண்கள் அனைவருக்கும் பேருந்தில் இலவச பயண திட்டத்தை அரசு அறிவித்து நடைமுறையில் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.


    👉புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் குடும்பக்கப்பட்டுப்பாடு சிகிச்சையில் பெண் உயிரிழந்த நிலையில் உறவினர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உயிரிழந்த ராணியின் குடுமபத்திற்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.


    👉மதுரை: மதுரை தல்லாகுளத்தில் காவலர்கள் எனக்கூறி சோதனை செய்வது போல் நடித்து ரூ.5 லட்சம் வழிப்பறி செய்துள்ளனர். விருதுநகரை சேர்ந்த பரமசிவம் என்பவரிடம் ரூ.5 லட்சம் பறித்த 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


    👉லண்டன்: ஆப்கான் பிரச்சனை, நிதிநிலை குறித்து ஜி-7 நாடுகள் பங்கேற்கும் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. ஆப்கானிஸ்தான் மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை ஜி-7 நாடுகள் அமைப்பு விதிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.


    👉டெல்லி: கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வாட்ஸ் அப் மூலம் பொதுமக்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று ஒன்றிய அமைச்சர் மன்சுக் மண்டாவியா தகவல் தெரிவித்துள்ளார். 9013151515 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் அனுப்பி தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவித்தார்.


👉நாசிக்: ஒன்றிய அமைச்சர் நாராயணன் ரானேவை நாசிக் போலீஸ் கைது செய்து விசரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரேவை கன்னத்தில் அறைவேன் என்று கூறியதால் ஒன்றிய அமைச்சர் நாராயணன் ரானே கைது செய்யப்பட்டார்.


    👉சென்னை:  கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு முன்னர், முறையாக விசாரிக்கப்படவில்லை என ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு வாதம் தெரிவித்துள்ளது. மேலும் கோடநாடு வழக்கை விசாரித்து முடிக்க 8 வாரம் அவகாசம் தேவை என்றும் தமிழக அரசு வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளார்

.

    👉சென்னை: தமிழ்நாட்டில் 10 பேரூராட்சிகளில் அனைத்து வசதிகளுடன் நவீன பேருந்து நிலையங்கள் ரூ.50 கோடியில் அமைக்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். கடலூர், மன்னார்குடி, ராணிப்பேட்டை, சங்கரன்கோவில் உள்ளிட்ட 10 பேரூராட்சிகளில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.


    👉டெல்லி: ஒன்றிய அமைச்சர் நாராயண் ராணே கைது செய்யப்பட்டதற்கு பாஜக தலைவர் ஜே.பி.நட்டா கண்டனம் தெரிவித்துள்ளார். ஒன்றிய அமைச்சர் நாராயண் ராணே கைது செய்தது அரசியலமைப்பு மதிப்புகளை மீறிய செயலாகும் என அவர் கூறியுள்ளார்.


    👉ஜம்மு: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் இந்த ஆண்டில் 100 பேர் தீவிரவாதத்தை கைவிட்டுள்ளனர் என ஐஜி விஜயகுமார் தெரிவித்துள்ளார். ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் போலீஸ், ராணுவம், மக்களின் கூட்டு முயற்சியால் 100 பேர் தீவிரவாதத்தை கைவிட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.


    👊👉திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அரிசி ஆலை மகன் கடத்தல் வழக்கில் 6வது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக இருந்த 2 பேரில் ஒருவரை திருப்பூர் தனிப்படை போலீஸ் கைது செய்தது.


    👉சென்னை: ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் புதிய அறிவிப்பின் மூலம் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பயன்பெறுவர் என கணிக்கப்பட்டுள்ளது.


முக கவசம் உயிர் கவசம்