கொரோனா இலவச தடுப்பூசி டோஸ்களை, செலுத்திய விவரம் வெளியீடு

 


             டெல்லி: மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கையிருப்பில் 38 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் உள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. 


நாடு தழுவிய தடுப்பூசி திட்டத்தின் ஒரு பகுதியாக ஒன்றிய அரசு இதுவரை 58,31,73,780 கொரோனா தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இலவச அடிப்படையில் வழங்கி உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது


சென்னை: தமிழகத்தில் 8 லட்சம் தடுப்பூசி போடும் அளவுக்கு கட்டமைப்பு உள்ளது, ஆனால் 2.3 லட்சமே போடுகிறோம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 


தனியாருக்கான தடுப்பூசிகளை ஒன்றிய அரசே கொள்முதல் செய்து தந்தால் அதிகமாக போடலாம் எனவும் தெரிவித்துள்ளார். திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.


🙏சமூக இடைவெளி கடைபிடிப்போம்🙏