மல்யுத்தத்தில் வெள்ளிப்பதக்கம் வென்ற ரவிக்குமார் தாஹியாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு
வருங்காலங்களில் மேலும் பல வெற்றிகளை குவிக்க ரவிக்குமாருக்கு வாழ்த்துக்கள்" - முதலமைச்சர் ஸ்டாலின்
***********
👉அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மறைவை அடுத்து அதிமுக சார்பில் 3 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும்.
அதிமுகவின் அனைத்து நிகழ்ச்சிகளும் மூன்று நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு.
**************
👉கோவையில் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை, பான் மசாலா, குட்கா போன்ற போதைப்பொருட்கள் விற்பனை மற்றும் பதுக்கி வைத்தல் குறித்த தகவல் கிடைத்தால் 94440-42322 என்ற அலைபேசி எண்ணிற்கு தெரிவித்திட வேண்டும்
- கோவை ஆட்சியர் சமீரன்
*************
🙏முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கு.
ஆவணங்கள் திரட்டப்பட்டு அதன் அடிப்படையில் விசாரணை நடைபெறுவதாக தமிழ்நாடு அரசு தகவல்.
காவல்துறை விசாரணையை தொடரலாம் என உயர்நீதிமன்றம் அனுமதி.
*************
🙏மாற்றிக்கொள்ளுங்கள் இல்லையெனில் மாற்றப்படுவீர்கள்; அரசு அதிகாரிகளுக்கு துரைமுருகன் எச்சரிக்கை
*************
' 👉தேசிய ரயில்வே திட்டத்திற்கும் ரயில்வே தனியார் மயமாக்கலுக்கும் தொடர்பில்லை' - மத்திய அரசு
*************
👉கலைஞர் கருணாநிதியின் 3ம் ஆண்டு நினைவு தினத்தன்று அவரவர் இல்லங்களிலேயே மரியாதை செலுத்த திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தல்!
*************
👉தமிழ்நாடு அரசின் மாநில பாடநூல்களில் தமிழ் சான்றோர்களின் பெயர்களில் இருந்த சாதியைக் குறிக்கும் பெயர்கள் நீக்கம்
தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யர் பெயரில் இருந்த அய்யர் என்ற சொல் 12ம் வகுப்பு தமிழ் பாடநூலிருந்து நீக்கம்
👉மாணவர்களின் வீடுகளுக்கே சென்று சத்துணவு.. 15 நாட்களுக்குள் செயல்படுத்த திட்டம் : தமிழக அரசின் சூப்பர் முயற்சி
*************