இன்றைய ராசிபலன்

 


      இன்றைய ராசிபலன் 31.08.2021 ஆவணி ( 15 ) செவ்வாய்க்கிழமை.!


மேஷம்


மேஷம்: குடும்பத்தில் நல்ல குதூகலமான சூழல் உருவாகும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும். உற்சாகமாகச் செயல்படும் நாள்.


ரிஷபம்


ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வேலைகளை இழுத்துப் போட்டுப் பார்க்க வேண்டி வரும். யாரையும் எளிதில் நம்பி விடக் கூடாது. வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிடவேண்டாம். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். பொறுப்புடன் செயல்பட வேண்டிய நாள்.


மிதுனம்


மிதுனம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். வாகனம் தொந்தரவு தரும். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சினைகள் வரும். உத்தியோகத்

தில் மேலதிகாரி விவாதம் வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.


கடகம்


கடகம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோரிடம் மனம் விட்டுப் பேசுவீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வெளிவட்டாரத்தில் புதுஅனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். மதிப்புக் கூடும் நாள்.


சிம்மம்


சிம்மம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். உறவினர் நண்பர்களால் ஆதாயமுண்டு. சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். சாதிக்கும் நாள்.


கன்னி


கன்னி: கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகிய அமைதி அதிகரிக்கும். தடைப்பட்ட வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். பணவரவு திருப்தி தரும். உறவினர்கள் மதிப்பார்கள். ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் மேலதிகாரி உதவுவார். புதிய மாற்றம் ஏற்படும் நாள்.


துலாம்


துலாம்: சந்திராஷ்டமம் இருப்பதால் செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்தியோகத்தில் அனைவரிடமும் அளவாக பழகுங்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.


விருச்சிகம்


விருச்சிகம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். கல்யாண பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள்.  திறமைகள் வெளிப்படும் நாள்.


தனுசு


தனுசு: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர் நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். திடீர் யோகம் கிட்டும் நாள்.


மகரம்


மகரம்: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறை வேற்றுவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். நட்பால் ஆதாயம் உண்டு.வியாபாரத்தில் புதுவேளையாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். கனவு நனவாகும் நாள்.


கும்பம்


கும்பம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். பணப்பற்ற குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள்.  வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சினை தீரும். உத்தியோகத்தில்  மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்.  உழைப்பால் உயரும் நாள்.


மீனம்


மீனம்: சவால்களில் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். தைரியம் கூடும் நாள்...


                       *சுபம்*


திருமதி மோகனா செல்வராஜ்


😷முகக் கவசம் உயிர்க்கவசம்😷


🪨🍃🪨🍃🪨🍃🪨🍃🪨🍃🪨