ஒரு வரிச் செய்திகள்

 


    ஒரு வரிச் செய்திகள் !! 


👉 உங்களுடைய வெற்றிக்காக மொத்த நாடும் வேண்டி கொள்கிறது, நாடு உங்களை நாளை கொண்டாடும் என பவீனா பட்டேலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.


பாராலிம்பிக் பெண்கள் டேபிள் டென்னிஸ் போட்டி; சீன வீராங்கனையை வீழ்த்தி இந்திய வீராங்கனை பவினா பென் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.


👉 திருவள்ள ர் மாவட்டம் திருவொற்றியு ரில் 200 கோடி ரூபாய் செலவில் புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும் என மீன்வளத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


👉 சேலம் பெரியார் பல்கலைக்கழக பேராசிரியை முனைவர் நாஸினி திடீர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


👉 சென்னை கொளத்தூரில் சர்வதேச தரத்தில் வண்ணமீன் வர்த்தக மையம் ரூ.50 கோடியில் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.


👉 ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினர் மற்றொரு தாக்குதல் நடத்தப்போவதாக அமெரிக்கா தேசிய பாதுகாப்பு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


👉 இந்தோனேசியாவில் 7,200 ஆண்டுகளுக்கு முன்பு வேட்டையாடி வாழ்ந்த பெண்ணின் எலும்புகளிலிருந்து, புதிய மனித மரபணுவை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.


👉 செப்டம்பர் மாதம் துவங்க இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில், அம்மாதத்தில் 12 நாட்கள் வரை வங்கிகள் செயல்படாது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.


👉 ஆந்திரா - ஒடிசாவை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


👉 உலகின் மிகப்பெரிய காற்றாலையைச் சீனாவின் தனியார் நிறுவனம் தற்பொழுது வடிவமைத்துள்ளது.


👉 தமிழ்நாட்டின் பவானி ஜமுக்காளம், பத்தமடை பாய், ஈத்தாமொழி நெட்டை தென்னைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.


👉 ஒரு மாநிலத்தில் பதிவு செய்த வாகனத்தை வேறு மாநிலத்துக்குக் கொண்டு செல்லும் பொழுது மறு பதிவு செய்வதைத் தவிர்க்கும் வகையில் புதிதாக பாரத் வரிசை கொண்ட பதிவு முறையை மத்தியச் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.


👉 உலகிலேயே பெரிய பீரங்கி எனக் கருதப்படும் ஜெய்வன் பீரங்கி ராஜஸ்தானின் ஜெய்ப்பு ரில் உள்ள ஜெய்கர் கோட்டையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.


👉 முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட, விக்ரஹh என்ற அதிநவீன ரோந்து கப்பலை இந்திய கடலோர காவல்படையின் பயன்பாட்டுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கிவைத்தார்.


👉 காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.


👉 ஆயுதங்கள், வாகனங்கள் உள்ளிட்ட ஆப்கான் அரசின் சொத்துக்களை திருப்பி தர தாலிபான்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


👉 டிசம்பர் மாதத்தில் சோதனை முறையில் டிஜிட்டல் பணப்புழக்கம் தொடங்கக் கூடும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். 


🙏முகக் கவசம் உயிர்க்கவசம்🙏