நடிகை மீராமிதுன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு காவல் துறை

 


       நடிகை மீராமிதுன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி மைலாப்பூர் காவல்நிலையத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அலுவலக செயலாளர் முரளி புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது


நடிகை மீராமிதுன் வெளியிட்டுள்ள காணொளி ஒன்றில் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்களை இழிவுபடுத்தும் வகையில் கேவலமாக பேசியுள்ளார். அந்த சாதியினருக்கு நடக்கின்ற கொடுமைகளுக்கு அவர்களின் நடத்தைகள் தான் காரணம் என்றும் பேசியிருக்கிறார். மேலும் பட்டியல் சாதியைச் சேர்ந்த திரைப்பட இயக்குனர்களை குறிப்பிட்டு இழிவுபடுத்திப் பேசி இருக்கிறார்.பொது வெளியில் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்களை இழிவுபடுத்திப் பேசிய நடிகை மீராமிதுன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.


இந்தப் புகாரின் அடிப்படையில் மைலாப்பூர் காவல்நிலைய போலீசார் நடிகை மீராமிதுன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


நிருபர் பாலாஜி


முக கவசம் உயிர் கவசம்