தூத்துக்குடி மாவட்டம் (02-08-2021)
கொரோனா பெருந்தொற்று 3வது அலை பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த விழிப்புணர்வு வாரத்தின் 2ம் நாள் நிகழ்ச்சி (02-08-2021) இன்று தூத்துக்குடி குரூஸ் பர்னாந்து சிலை சந்திப்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
கொரோனா 3ம் அலை பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு ஆகஸ்ட் 1ம் தேதியில் இருந்து 7ம் தேதி வரை கொரோனா பெருந்தொற்று விழிப்புணர்வு வாரமாக அறிவித்துள்ளது. அதன்படி இன்று (02.08.2021) தூத்துக்குடி குரூஸ் பர்னாந்து சிலை சந்திப்பில் எப்படி கைகளை நன்றாக கழுவுவது என்பது குறித்து பொதுமக்களுக்கு செய்துகாட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பின்னர் ஏழை எளிய மக்கள் 50 பேருக்கு அரிசிப்பை மற்றும் பொதுமக்களுக்கு சானிடைசர் மற்றும் முககவசங்கள் வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், தமிழக அரசு ஆகஸ்ட் 1ம் தேதியில் இருந்து 7ம் தேதி வரை கொரோனா பெருந்தொற்று விழிப்புணர்வு வாரமாக அறிவித்துள்ளது. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, அதன்படி இன்று எப்படி கைகளை நன்றாக கழுவுவது என்பது குறித்த விழிப்புணர்வு நடத்தப்பட்டது. கொரோனாவிலிருந்து நம்மை பாதுகாக்க அரசு சொல்லக்கூடிய விதிமுறைகள் 4 தான் ஒன்று தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும், இரண்டாவது கட்டாயமாக முககவசம் அணியவேண்டும் அதே போல் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், பொதுமக்கள் தேவை இல்லாமல் பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும், கைகளை நன்கு ஒரு நாளில் நான்கு அல்லது ஐந்து தடவை சோப்பு அல்லது கிருமி நாசினி கொண்டு அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும், இது போன்ற விதிமுறைகளை நாம் கடைபிடித்தால் தான் கொரோனா பெருந்தொற்று 3ம் அலையிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.
பெருந்தொற்று 3வது அலை பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த விழிப்புணர்வு வாரத்தின் 2ம் நாள் நிகழ்ச்சி இன்று தூத்துக்குடி குரூஸ் பர்னாந்து சிலை சந்திப்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
கொரோனா 3ம் அலை பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு ஆகஸ்ட் 1ம் தேதியில் இருந்து 7ம் தேதி வரை கொரோனா பெருந்தொற்று விழிப்புணர்வு வாரமாக அறிவித்துள்ளது. அதன்படி இன்று (02.08.2021) தூத்துக்குடி குரூஸ் பர்னாந்து சிலை சந்திப்பில் எப்படி கைகளை நன்றாக கழுவுவது என்பது குறித்து பொதுமக்களுக்கு செய்துகாட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பின்னர் ஏழை எளிய மக்கள் 50 பேருக்கு அரிசிப்பை மற்றும் பொதுமக்களுக்கு சானிடைசர் மற்றும் முககவசங்கள் வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், தமிழக அரசு ஆகஸ்ட் 1ம் தேதியில் இருந்து 7ம் தேதி வரை கொரோனா பெருந்தொற்று விழிப்புணர்வு வாரமாக அறிவித்துள்ளது. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, அதன்படி இன்று எப்படி கைகளை நன்றாக கழுவுவது என்பது குறித்த விழிப்புணர்வு நடத்தப்பட்டது. கொரோனாவிலிருந்து நம்மை பாதுகாக்க அரசு சொல்லக்கூடிய விதிமுறைகள் 4 தான் ஒன்று தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும், இரண்டாவது கட்டாயமாக முககவசம் அணியவேண்டும் அதே போல் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், பொதுமக்கள் தேவை இல்லாமல் பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும், கைகளை நன்கு ஒரு நாளில் நான்கு அல்லது ஐந்து தடவை சோப்பு அல்லது கிருமி நாசினி கொண்டு அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும், இது போன்ற விதிமுறைகளை நாம் கடைபிடித்தால் தான் கொரோனா பெருந்தொற்று 3ம் அலையிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். ஆகவே கொரோனா பரவல் 3ம் அலையை தடுப்பதற்கு அரசுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி தனது சிறப்புரையை நிறைவு செய்தார்.
இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ் தலைமையில், மத்தியபாகம் காவல் ஆய்வாளர் திரு. ஜெயப்பிரகாஷ் மற்றும் போலீசார் செய்திருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடிதூத்துக்குடி போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் திரு. மயிலேறும்பெருமாள், மோட்டார் வாகன ஆய்வாளர் திரு. பெலிக்ஸ் மாசிலாமணி, தூத்துக்குடி மாநகராட்சி பாத்திமா நகர், நகர் நல மருத்துவர் திரு. தினேஷ், சுகாதார ஆய்வாளர் திரு. முஷேஃப், மத்திய பாகம் உதவி ஆய்வாளர் திரு. முருகப்பெருமாள், திரு. முத்துக் கிருஷ்ணன், போக்குவரத்து பிரிவு உதவி ஆய்வாளர் திரு. சுனைமுருகன், தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் திரு. ஞானராஜ், தலைமைக் காவலர் திரு. சுப்பிரமணியன் உட்பட காவல்துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
🙏முகக் கவசம் உயிர்க்கவசம்🙏