குழந்தையை தாக்கி கைதான தாய் துளசியை 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவு

 


         விழுப்புரம்: செஞ்சி அருகே 2 வயது குழந்தையை கொடூரமாக தாக்கிய தாய் துளசிக்கு மனநலத்தில் பாதிப்பு எதுவும் இல்லை என தெரியவந்துள்ளது. விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துளசிக்கு நடந்த பரிசோதனையில் தெரியவந்துள்ளது. துளசியின் மனநலத்தில் எந்த பாதிப்பும் இல்லை என்று மருத்துவர் பாரதி சான்று வழங்கி உள்ளார்.


 விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே குழந்தையை தாக்கி கைதான தாய் துளசியை 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. 15 நாள் நீதிமன்ற காவலில் துளசியை சிறையிலடைக்க செஞ்சி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தினேஷ் உத்தரவிட்டுள்ளார். குழந்தையை அடித்து கொடுமைப்படுத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில் துளசி நேற்று கைது செய்யப்பட்டார்.


பிரேம்குமார் என்பருடன் ஏற்பட்ட பிரச்சனையால் தான் குழந்தையை தாக்கியதாக தாய் துளசி வாக்குமூலம் அளித்துள்ள நிலையில், பிரேம்குமாரை பிடிக்க சென்னை விரைந்தது தனிப்படை போலீஸ்