ஒரு வரிச் செய்திகள்

 


    🙏ரஷ்ய விண்கலம் இணைந்தபோது பன்னாட்டு விண்வெளி நிலையம் 45 நிமிடங்களுக்கு கட்டுப்பாட்டை இழந்ததாக அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா தெரிவித்துள்ளது.


                        *********

       🙏தமிழகத்தில் 10 மற்றும் 11ஆம் வகுப்பை நிறைவு செய்துள்ள மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழில் ஆல் பாஸ் என்று அச்சிட்டு வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


                      ***********

        🙏ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லாததால் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்க தேவையில்லை என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.


                      ***********

       🙏சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி ஆற்ற இருக்கும் உரையில் இடம் பெறும் வகையில் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை அனுப்பலாம் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளத


                      *********

       🙏இலங்கை அகதிகள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்பதால், அவர்களுக்கு குடியுரிமை வழங்க இயலாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.


                       *********

       🙏நிதிநிலையை சீர்செய்த பின் ரேஷன் கடைகளின் மூலம் குடும்ப தலைவிக்கு ரூ.1,000 வழங்கப்படும் என்று வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் விளக்கம் அளித்துள்ளார். குடும்ப தலைவிக்கு ரூ.1,000 வழங்கும் திட்டத்தை முதல்வர் விரைவில் தொடங்கி வைப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.


                         *********


       🙏தென்மேற்கு பருவக்காற்றால் அடுத்த 24 மணி நேரத்தில் கோவை, நீலகிரி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்;ர் ஆகிய 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 


                      *********


       🙏நடப்பு கல்வியாண்டில் 85 % கட்டணத்தை வசூலித்துக்கொள்ள தனியார் பள்ளிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. பொதுமுடக்கம், வேலை இழப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் 75% கட்டணம் செலுத்தலாம் என்றும், கட்டணத்தை 6 தவணைகளில் பெற வேண்டும் என்றும், கடைசித் தவணையை 2022 பிப்ரவரி இரண்டாம் நாளுக்குள் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                 

                       *********

       🙏டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை 69 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹெய்ன் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.


                           *********