சென்னை கபாலீஸ்வரர் கோவில் நிலம் மீட்பு அமைச்சர் பிகே சேகர்பாபு

 

 

       சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான சுமார் 46 கிரவுண்ட் பரப்பளவு கொண்ட நிலத்தை P.S. உயர்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்துக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது.அந்த இடத்தினை ஆய்வுசெய்து மேற்படி இடத்தினை விரைவில் திருக்கோயிலுக்கு வசம் மீட்டு வாடகை வசூல் செய்திட இந்துசமய அறநிலைத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.


மேலும் ஏற்கனவே திருக்கோயில் வசம் சுவாதீனம் எடுக்கப்பட்ட 30 கிரவுண்ட் நிலத்தில் மாணவ ,மாணவியர்களுக்கு பயன்படும் வகையில் அனைத்து வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க அலுவல் அலுவலர்களுக்கு அறநிலை துறை அமைச்சர் பிகே சேகர்பாபு அறிவுறுத்தினார், உடன் மயிலை வேலு எம்எல்ஏ ஆணையர் குமரகுருபரன் மற்றும் அறநிலையத்துறை ஊழியர்கள் உடனிருந்தனர்.


🙏முக கவசம் உயிர் கவசம்🙏