கதம்ப வண்டுகள் கடித்து ஒருவர் பலி

 


         கரூர் அருகே கதம்ப வண்டுகள் கடித்து கார்த்திக் என்ற மாற்றுத்திறனாளி உயிரிழந்தார். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். 


செட்டிபாளையம் அணைப் பகுதியில் நூறு நாள் வேலை செய்து கொண்டிருந்தவர்களை கதம்ப வண்டுகள் தாக்கியுள்ளன. கதம்ப வண்டுகள் கடித்து பாதிக்கப்பட்ட அனைவரும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.