சென்னை அடுத்த ஊனமாஞ்சேரியில் பயிற்சி துணை கண்காணிப்பாளர்களின் நிறைவு அணிவகுப்பு விழா :
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.
பயிற்சி பெற்ற துணை கண்காணிப்பாளர்களுக்கு முதலமைச்சர் பதக்கம் வழங்கினார்.
ஒருங்கிணைந்த சைபர் பயிற்சி வளாகத்தை முதல்வர் திறந்து வைத்தார்
*************
பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட அவதூறு வழக்குகளை திரும்ப பெற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
2012 முதல் 2021ஆம் ஆண்டு வரை பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட 90 அவதூறு வழக்குகள் ரத்து
சேலம் மாநகரில் 19 இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.*
சேலத்தில் அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்பட 1500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது*
பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை - முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. மீது விழுப்புரம் நீதிமன்றத்தில் 400 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்
100க்கும் மேற்பட்டோர் சாட்சியங்களாக சேர்ப்பு; ஐ.ஜி., டி.ஐ.ஜி., 2 எஸ்.பி.க்கள் மீதும் குற்றச்சாட்டுகள் இடம்பெற்றுள்ளன
சென்னையில் இருந்து வெளிநாடு செல்வதற்கான விமானக் கட்டணம் உயர்ந்துள்ளது.
லண்டன், பாரீஸ், நியூயார்க் நகரங்களுக்கான பயணக் கட்டணம் பன்மடங்கு உயர்ந்துள்ளதால் வெளிநாடு பயணம் மேற்கொள்வோர் அவதி அடைந்துள்ளனர்.
ஆட்டோ, டாக்சியில் பயணிக்கும் மக்களிடம் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.*
ஆட்டோ, டாக்சியில் கட்டணமீட்டரை மாற்றியமைப்பதை குற்றமாக பார்க்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
**************
தமிழகத்தில் சிமெண்ட் விலையேற்றம் குறித்து விசாரணை நடத்தி 4 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சிமெண்ட் உற்பத்தியாளர்கள் செயற்கையாக தட்டுப்பாட்டை உருவாக்கி வருவதாக மனுவில் குற்றச்சாட்டு.
**************
உள்ளாட்சி அமைப்புகளில் டெண்டர்கள் வெளிப்படைத்தன்மையுடன் நடக்க உரிய சட்டவிதிகளை பின்பற்ற அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அறிவுறுத்த வேண்டும்”
- தலைமைச் செயலாளருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.
தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு டெல்லி பயணம் மேற்கொள்கிறார்.
ஆகஸ்ட் 2-ல் தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் திருவுருவப்பட திறப்பு விழா நடைபெறுகிறது.
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அழைப்பிதழ் வழங்க சபாநாயகர் அப்பாவு டெல்லி பயணம் மேற்கொள்கிறார்.
🙏 முக கவசம் உயிர் கவசம்🙏