இரு வரிச் செய்திகள்

 


      நாடாளுமன்றத்திற்கு டிராக்டர் ஓட்டி வந்த ராகுல் காந்தி... போராடும் விவசாயிகள் தீவிரவாதிகளா எனக் கேள்வி.

  


   தமிழகத்தில் மேலும் 1,785 பேருக்கு கொரோனா தொற்று 

தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 26 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் கொரோனாவுக்கு 22,762 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

                     


        தமிழ்நாட்டின் ஆன்மீக தலைநகரம் காஞ்சிபுரம்; ஜெயந்திர ஸ்வாமிகளின் தலைமையின் கீழ் காஞ்சி மடம் மிகப்பெரிய உயரத்தை எட்டியது” 

- ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்




   ரஜினி மக்கள் மன்றத்தின் 3 மாவட்டச் செயலாளர்கள், மகளிர் அணி, வர்த்தகர் அணி,  வழக்கறிஞர் அணி மற்றும் இளைஞர் அணி செயலாளர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.



    திண்டுக்கல் ரயில் நிலையத்தில் சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன் சார்பில் ஆர்ப்பாட்டம்

ரயில்வே தனியார் மயமாக்கலை கண்டித்தும், அகில இந்திய ரயில்வே சம்மேளன பொது செயலாளர் சிவ கோபால் மிஷ்ரா வின்  செல்போன் பேச்சை மத்திய அரசு ஒட்டு கேட்கபடுவதை கண்டித்தும் கோசம் எழுப்பினர்

 


   

        மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை ஆகஸ்ட் முதல் வாரம் கிருஷ்ணகிரி அல்லது தர்மபுரி மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார்” 

- மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

  


    

       அடுத்து வரும் ஒலிம்பிக் போட்டியில் தமிழ்நாட்டிலிருந்து 25 பதக்கங்களையாவது பெற வேண்டும் என்பதே முதலமைச்சரின் நோக்கம்" 


விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன்.


 ஒலிம்பிக்கில் பங்கேற்கச் சென்றுள்ள சுபா வெங்கடேசன், தனலட்சுமி ஆகிய இருவருக்கும் அரசு வேலை வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் மெய்யநாதன் பேட்டி


                    *************


       நடப்பாண்டு 50 எம்பிபிஎஸ் மாணவர்களை 3 மருத்துவ கல்லூரிகளில் சேர்க்க மத்திய அரசிடம் பரிந்துரை"


எய்ம்ஸ் மருத்துவமனை சார்பாக தற்காலிகமாக மதுரை, தேனி, சிவகங்கை மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை

             ******************


      தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை வழங்க வலியுறுத்தினோம்


* மேகதாது அணை கட்டப்பட்டால் டெல்டா 

மாவட்டங்கள் பாலைவனம் ஆகிவிடும் என 

தெரிவித்தோம்


- டெல்லியில் பிரதமர் மோடியுடனான சந்திப்புக்கு பிறகு ஈபிஎஸ் பேட்டி

  


       தனியார் கல்வியியல் கல்லூரிகளில் B.Ed படிப்புக்கு #ரூ.30,000க்கும் மேல் வசூலித்தால் #நடவடிக்கை : அமைச்சர் #பொன்முடி எச்சரிக்கை.


🙏முக கவசம் உயிர்க்கவசம்🙏