இன்றைய ராசிபலன்

 


        இன்றைய (05-07-2021) ராசி பலன்கள்


மேஷம்

ஜூலை 05, 2021


சிறு தூரப் பயணங்களின் மூலம் மனதில் மாற்றங்கள் உண்டாகும். சகோதரிகளிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். மனதிற்கு பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி நிம்மதி உண்டாகும். சொத்துப்பிரிவினை தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும்.அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : கிளி பச்சைஅஸ்வினி : மாற்றங்கள் உண்டாகும்.


பரணி : ஒற்றுமை ஏற்படும்.


கிருத்திகை : ஆர்வம் அதிகரிக்கும்.ரிஷபம்

ஜூலை 05, 2021


பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் உண்டாகும். உடனிருப்பவர்களின் தன்மைகளை அறிந்து கொள்வீர்கள். திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த வெற்றிகள் சாதகமாகும். காதில் இருந்துவந்த இன்னல்கள் மற்றும் வலிகள் குறையும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மேன்மைக்கான சிந்தனைகள் மேம்படும். விளையாட்டு சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும்.அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்கிருத்திகை : புரிதல் உண்டாகும்.


ரோகிணி : வெற்றிகள் சாதகமாகும்.


மிருகசீரிஷம் : முன்னேற்றமான நாள்.மிதுனம்

ஜூலை 05, 2021


மற்றவர்களின் உள்ளத்தில் இருக்கக்கூடிய எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். இழந்த பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பத்திரம் தொடர்பான பணிகளில் சற்று பொறுமையுடன் செயல்பட வேண்டும். வித்தியாசமான கற்பனைகளின் மூலம் தூக்கமின்மை சிலருக்கு ஏற்படும். கூட்டு வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்மிருகசீரிஷம் : வாய்ப்புகள் உண்டாகும்.


திருவாதிரை : பொறுமை வேண்டும்.


புனர்பூசம் : லாபம் அதிகரிக்கும்.கடகம்

ஜூலை 05, 2021


கல்வி தொடர்பான வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். பேச்சுத்திறமைகளின் மூலம் லாபம் அடைவீர்கள். பார்வை தொடர்பான இன்னல்கள் குறையும். எதிர்பாராத சில யோகங்களின் மூலம் லாபம் உண்டாகும். பரந்த மனப்பான்மை மூலம் பலரின் அறிமுகம் கிடைக்கும். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். புதிய நபர்களின் மூலம் வருமானம் மேம்படும்.அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்புனர்பூசம் : சாதகமான நாள்.


பூசம் : அறிமுகம் கிடைக்கும்.


ஆயில்யம் : இலக்குகள் பிறக்கும்.சிம்மம்

ஜூலை 05, 2021


வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உடனிருப்பவர்கள் பற்றி பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து கொள்வீர்கள். தந்திரமான செயல்பாடுகளின் மூலம் எண்ணிய செயல்களை செய்து முடிப்பீர்கள். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகளும், பதவிகளும் சிலருக்கு உண்டாகும். மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்படும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். இளைய சகோதரர்களுக்கு லாபகரமான சூழ்நிலைகள் உண்டாகும்.அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்மகம் : புரிதல் ஏற்படும்.


பூரம் : முன்னேற்றமான நாள்.


உத்திரம் : லாபம் உண்டாகும்.கன்னி

ஜூலை 05, 2021


ரகசிய செயல்பாடுகளின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கால்நடைகள் வளர்ப்பு தொடர்பான விஷயங்களில் லாபம் மேம்படும். புதிய இடங்களுக்கு செல்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் ஆதாயமான சூழ்நிலைகள் ஏற்படும். உணர்ச்சிவசப்படாமல் பொறுமையுடன் செயல்படுவது அவசியமாகும். மனதில் இருந்துவந்த பலவிதமான குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும்.அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்உத்திரம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


அஸ்தம் : ஆதாயமான நாள்.


சித்திரை : தெளிவு பிறக்கும்.துலாம்

ஜூலை 05, 2021


எதிர்பாராத செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும். வேலையாட்களிடம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனுசரித்து செல்வது நல்லது. அஞ்ஞான சிந்தனைகளின் மூலம் மனதில் குழப்பங்கள் உண்டாகும். குடும்ப பெரியவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும். பொதுமக்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு பலதரப்பட்ட அனுபவமும், அலைச்சல்களும் உண்டாகும்.அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்சித்திரை : சேமிப்புகள் குறையும்.


சுவாதி : அனுசரித்து செல்லவும்.


விசாகம் : அலைச்சல்கள் உண்டாகும்.விருச்சிகம்

ஜூலை 05, 2021


வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். அரசு சார்ந்த உதவிகள் மற்றும் அதை சார்ந்த தடைகளை அறிந்து கொள்வீர்கள். வாழ்க்கைத்துணைவரின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும்.அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்விசாகம் : சாதகமான நாள்.


அனுஷம் : முன்னேற்றம் உண்டாகும்.


கேட்டை : மகிழ்ச்சியான நாள்.தனுசு

ஜூலை 05, 2021


உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். தாய்மாமன் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். மனக்கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். கூட்டாளிகளிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் சாதகமான முடிவுகள் கிடைக்கும். நெருக்கமானவர்களின் மூலம் விரயங்கள் ஏற்பட்டாலும் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும்.அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்மூலம் : ஆதரவான நாள்.


பூராடம் : புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள்.


உத்திராடம் : விரயங்கள் உண்டாகும்.மகரம்

ஜூலை 05, 2021


எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். புத்திக்கூர்மையான செயல்பாடுகளின் மூலம் பாராட்டுகள் கிடைக்கும். மறைமுகமாக இருக்கக்கூடிய சில விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். போட்டித்தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். இயந்திரம் தொடர்பான கலை பணிகளில் லாபகரமான சூழ்நிலைகள் உண்டாகும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்உத்திராடம் : பாராட்டுகள் கிடைக்கும்.


திருவோணம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


அவிட்டம் : லாபகரமான நாள்.கும்பம்

ஜூலை 05, 2021


கல்வி கற்கும் மாணவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். மனதில் புதுவிதமான ஆசைகள் தோன்றும். சுபகாரியங்கள் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். வெளியூர் தொடர்பான பயணங்களில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். சாதுர்யமான செயல்பாடுகளின் மூலம் அனைவரிடத்திலும் பாராட்டுகளை பெறுவீர்கள். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்அவிட்டம் : முன்னேற்றம் உண்டாகும்.


சதயம் : தடைகள் குறையும்.


பூரட்டாதி : விருப்பங்கள் நிறைவேறும்.மீனம்

ஜூலை 05, 2021


வீட்டில் மனதிற்கு பிடித்தவாறு சில மாற்றங்களை செய்வீர்கள். செய்யும் முயற்சிகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். மனம்விட்டு பேசுவதன் மூலம் தெளிவு உண்டாகும். வியாபாரம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சிறு சிறு அவப்பெயர்கள் ஏற்பட்டு நீங்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்பூரட்டாதி : அங்கீகாரம் கிடைக்கும்.


உத்திரட்டாதி : தெளிவான நாள்.


ரேவதி : திறமைகள் வெளிப்படும்.


                       *சுபம்*


 வடிவமைப்பு திருமதி மோகனா செல்வராஜ்.


🙏முக கவசம் உயிர்க்கவசம்🙏