ஒலிம்பிக்கில் வாள் சண்டை போட்டியில் பெண்களுக்கான தனிநபர் பிரிவில் தமிழக வீராங்கனை பவானி தேவி வெற்றி

 


டோக்கியோ ஒலிம்பிக்கில் ஃபென்சிங்(வாள் சண்டை) போட்டியில் பெண்களுக்கான தனிநபர் சாப்ரே பிரிவில் தமிழக வீராங்கனை பவானி தேவி வெற்றி பெற்றார்.ஆனால்,இரண்டாவது சுற்றில் என்ன நடந்தது?

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த இரண்டு நாட்களாக ஒலிம்பிக் போட்டிகள் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.அந்த வகையில், இன்று காலை முதல் பல்வேறு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

முதல் சுற்று – வெற்றி:

இந்நிலையில்,இன்று நடைபெற்ற ஃபென்சிங் போட்டியில் பெண்களுக்கான தனிநபர் சாப்ரே பிரிவில் தமிழக வீராங்கனை பவானி தேவி,துனிசியா நாட்டை சேர்ந்த நாடியா பென் அஸிஜியை எதிர்கொண்டார்.போட்டியின் தொடக்கத்தில் இருந்து பவானி தேவி ஆதிக்கம் செலுத்தி 8-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார்.

இதனையடுத்து,பவானி தேவி தனது எதிர்ப்பாளரான அஸிஜியை 2 சுற்றுகளுக்கு மேல்,அவரை மேற்கொண்டு புள்ளிகள் பெற விடாமல்,துல்லியமாக தாக்கியது மட்டுமல்லாமல்,சில ஸ்மார்ட் தொடுதல்களினால் தனது புள்ளிகளையும் சேகரித்தார்.

இறுதியில்,பவானி தேவி 15-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.இதனால்,ஒலிம்பிக்கில் ஃபென்சிங் முதல் போட்டியில் வெற்றி பெற்ற முதல் இந்திய மற்றும் தமிழக வீராங்கனையாக பவானி தேவி உள்ளார்.ஏனெனில்,இந்தியாவில் இருந்து ஒலிம்பிக் போட்டிக்கு ஃபென்சிங் பெண்கள் பிரிவில் யாரும் தேர்வானது இல்லை.