செய்தி சுருக்கம் ...உண்மை செய்திகள்

 செய்தி சுருக்கம்.... உண்மை செய்திகள்



    😡இந்திய பயணிகள் விமானங்களுக்கு ஆகஸ்ட் 21ம் தேதி வரை தடை நீட்டிக்கப்படுவதாக கனடா அறிவித்துள்ளது.


    😡பக்ரீத் கொண்டாட்டங்களின் போது பொது இடங்களில் 50 பேருக்கு மேல் கூட்டமாக இருக்கக் கூடாது என உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.


    😡வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


    😡ஒலியை விட 9 மடங்கு வேகமாக செல்லக்கூடிய 'சிர்கான்" என்கிற அதிநவீன ஹைபர்சோனிக் ஏவுகணையை ரஷ்யா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.


     😡முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 54 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கக் கூடிய வகையில் 17 ஆயிரத்து 297 கோடி ரூபாய் மதிப்பிலான 33 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகிறது.


    😡தமிழகத்தில் பிளஸ்-2 மதிப்பெண்களில் திருப்தி இல்லாதவர்கள் அக்டோபரில் தேர்வு எழுதலாம் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.


    😡 சென்னை துறைமுகத்தில் இருந்து கடலூர் , நாகப்பட்டினம், புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கு விரைவில் பயணிகள் படகு சேவை தொடங்க இருக்கிறது. 400 கார்களையும் ஏற்றி செல்லும் வசதியும் உள்ளது என்று துறைமுக அதிகாரிகள் கூறினர்.


     😡இந்தியா-இலங்கை அணிகள் மோதும் 2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.


     😡அயர்லாந்துக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


    😡கர்நாடகத்தில் பி.யு .சி. 2-ம் ஆண்டு மாணவர்களுக்கான மதிப்பெண் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியாகும் என்று பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் கூறினார்.


    😡பெங்கள ரின் பிரிகேட் சாலையில், ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் அமைத்துள்ள சாலையில், சைக்கிள் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


    😡திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆகஸ்டு மாதத்திற்கான சிறப்பு கட்டண தரிசன டிக்கெட் இன்று வெளியிடப்படுகிறது.


     😡டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் தேர்வுகளில் இனி தமிழுக்கு முதலிடம் கொடுக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. வினாத்தாள், விடை வினாத்தாள் அறிவிக்கையில் தமிழ் பதிப்பு முதலிலும் ஆங்கில பதிப்பு இரண்டாவதாகவும் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


    😡மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு 69 சதவீத இடஒதுக்கீட்டை 2021-2022 ஆம் கல்வியாண்டில் அமல்படுத்துவது குறித்த நிலைபாட்டை தெரிவிக்கும்படி மத்திய அரசுக்கு உயா;நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


    😡பிரான்ஸ் பயணம் மேற்கொண்ட இந்திய கடற்படை கப்பல் ஐஎன்எஸ் தபா;, அந்நாட்டு போh;க்கப்பலுடன் பயிற்சியை நிறைவு செய்தது.


     😡அரசு கேபிள் டி.வி.யில் புதிதாக 30 சேனல்கள் இணைக்கப்பட்டுள்ளதாக அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் தலைவர் குறிஞ்சி சிவகுமார் தெரிவித்துள்ளார்.


    😡இந்தியா-நேபாளம் இடையிலான விமானப் போக்குவரத்து அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை வாரத்தில் இரு விமானங்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், இனி 6 விமானங்களை இயக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.


🙏முகக் கவசம் உயிர் கவசம்🙏