இன்றைய ராசிபலன்

 


        இ‌ன்றைய 

 (19-07-2021) ராசி பலன்கள்


மேஷம்

ஜூலை 19, 2021


வெளிவட்டாரங்களில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரம் தொடர்பான பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். சிந்தனைகளின் போக்கில் மாற்றங்கள் ஏற்படும். தந்தையின் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும்.அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்அஸ்வினி : அனுபவம் கிடைக்கும்.


பரணி : அலைச்சல்கள் உண்டாகும்.


கிருத்திகை : விழிப்புணர்வு வேண்டும்.ரிஷபம்

ஜூலை 19, 2021


எதிர்பாராத தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் மேம்படும். நண்பர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரம் தொடர்பான பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும்.அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.


ரோகிணி : மேன்மை உண்டாகும்.


மிருகசீரிஷம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.மிதுனம்

ஜூலை 19, 2021


கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். மனதை உறுத்திக் கொண்டிருந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் குறையும். எதிர்பாராத அலைச்சல்களின் மூலம் சோர்வு ஏற்படும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் பொறுமையுடன் செயல்படுவது நன்மையை ஏற்படுத்தும்.அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்மிருகசீரிஷம் : நெருக்கம் அதிகரிக்கும்.


திருவாதிரை : பொறுப்புகள் குறையும்.


புனர்பூசம் : முன்னேற்றம் ஏற்படும்.கடகம்

ஜூலை 19, 2021


ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். மனதிற்கு நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். குடும்ப பெரியவர்களின் ஆலோசனைகள் மூலம் தெளிவு ஏற்படும். பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும்.அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்புனர்பூசம் : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.


பூசம் : மேன்மை உண்டாகும்.


ஆயில்யம் : ஆதாயமான நாள்சிம்மம்

ஜூலை 19, 2021


தாய்வழி உறவினர்களிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்வது நல்லது. வாகனம் தொடர்பான பயணங்களில் நிதானம் வேண்டும். மனதில் புதுவிதமான சிந்தனைகளும், கற்பனைகளும் உண்டாகும். மனை தொடர்பான காரியங்களில் லாபம் ஏற்படும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வீர்கள். இழுபறியாக இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள்.அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்மகம் : அனுசரித்து செல்லவும்.


பூரம் : லாபம் ஏற்படும்.


உத்திரம் : இழுபறிகள் குறையும்.கன்னி

ஜூலை 19, 2021


பயணங்களின் மூலம் ஆதாயமடைவீர்கள். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். நெருக்கடியான சூழ்நிலைகள் குறைந்து மேன்மை ஏற்படும். வியாபார பணிகளில் சிறு மாற்றங்களின் மூலம் லாபமடைவீர்கள். முயற்சிகளில் இருந்துவந்த மறைமுகமான எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள்.அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்உத்திரம் : ஆதாயமான நாள்.


அஸ்தம் : நெருக்கடிகள் குறையும்.


சித்திரை : வெற்றிகரமான நாள்.துலாம்

ஜூலை 19, 2021


உத்தியோகம் தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மனதிற்கு நெருக்கமானவர்களின் மூலம் சிறு தூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். உறவினர்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். திட்டமிட்ட காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். மனை மற்றும் வீடு தொடர்பான கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும்.அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்சித்திரை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


சுவாதி : வாய்ப்புகள் உண்டாகும்.


விசாகம் : உதவிகள் கிடைக்கும்.விருச்சிகம்

ஜூலை 19, 2021


குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழல் அமையும். முயற்சிக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். பொழுதுபோக்கு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கல்வி தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். தர்க்க விவாதங்களின் மூலம் எண்ணிய முடிவுகள் கிடைக்கும்.அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சைவிசாகம் : கலகலப்பான நாள்.


அனுஷம் : ஆர்வம் அதிகரிக்கும்.


கேட்டை : மேன்மை உண்டாகும்.தனுசு

ஜூலை 19, 2021


மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். வாகனம் தொடர்பான பயணங்களின் மூலம் பொருள் ஆதாயம் ஏற்படும். விவசாயம் சார்ந்த பணிகளில் அலைச்சல்களின் மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். குடும்ப நபர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். நண்பர்களின் வழியில் எதிர்பார்த்த சில உதவிகள் காலதாமதமாக கிடைக்கும்.அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்மூலம் : ஆதாயம் ஏற்படும்.


பூராடம் : அலைச்சல்கள் உண்டாகும்.


உத்திராடம் : புரிதல் ஏற்படும்.மகரம்

ஜூலை 19, 2021


பாகப்பிரிவினை தொடர்பான விஷயங்களில் தைரியமான முடிவுகளை எடுப்பீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை அளிக்கும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களின் ஒத்துழைப்பு முன்னேற்றத்தை ஏற்படுத்தும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மனதில் மாற்றங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த உபாதைகள் குறையும்.அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு உத்திராடம் : தைரியமான நாள்.


திருவோணம் : திருப்தி உண்டாகும்.


அவிட்டம் : உதவிகள் கிடைக்கும்.கும்பம்

ஜூலை 19, 2021


விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். வியாபாரம் தொடர்பான பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். இழுபறியான தனவரவுகள் கிடைக்கும்.அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்அவிட்டம் : விருப்பங்கள் நிறைவேறும்.


சதயம் : இன்னல்கள் குறையும்.


பூரட்டாதி : அனுபவம் உண்டாகும்.மீனம்

ஜூலை 19, 2021


வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். வாடிக்கையாளர்களின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். புதுமையான சிந்தனைகளின் மூலம் பலரின் பாராட்டுகளை பெறுவீர்கள். உயர் பதவிகளில் இருப்பவர்களின் ஒத்துழைப்பும், அறிமுகமும் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். பெருந்தன்மையுடன் செயல்பட்டு பலரின் ஆதரவை பெறுவீர்கள்.அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்புபூரட்டாதி : ஆதரவான நாள்.


உத்திரட்டாதி : பாராட்டுகள் கிடைக்கும்.


ரேவதி : மாற்றங்கள் உண்டாகும்.


                     *சுபம்*

 

வடிவமைப்பு திருமதி மோகனா செல்வராஜ்


🙏முக கவசம் அணிய வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்🙏