பழனியில் குட்கா பொருட்கள் பறிமுதல் ஒருவர் கைது

 


    பழனியில் ரூ 5 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் ஒருவர் கைது


பழனி நகர் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக எஸ்பி தனிப்படைக்கு ரகசியத் தகவல் வந்ததை அடுத்து எஸ்பி தனிப் பிரிவு *சார்பு ஆய்வாளர் மாரிமுத்து* தலைமையிலான போலீசார் 


பழனி தட்டாங்குளத்தில் அமைந்துள்ள இர்பான் ஏஜென்சி குடோனில் சோதனையிட்டபோது அரசால் தடைசெய்யப்பட்ட  792 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருந்த சாகுல்ஹமீது என்பவரை போலீசார் கைது செய்தனர்.