ராயபுரத்தில் காசிமேடுவை சேர்ந்த ரவுடி போக்சோ சட்டத்தில் கைது

 


       மதுரை சிறுமியை கடத்தி வந்து 5 மாதம்  ரகசியமாக குடும்பம் நடத்திவந்த சென்னையைச் சேர்ந்த ரவுடி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.


சென்னை ராயபுரம்- காசிமேடு காசிபுரத்தைச் சேர்ந்தவர் லோகேஷ் என்கிற தேசப்பன் (21). இவர் கடத்திக் கொண்டுவரப்பட்ட  சிறுமியுடன்  ரகசியமாக குடும்பம் நடத்தி வருவதாக அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலையடுத்து, குழந்தைகள் நல அலுவலர்கள் விசாரணை நடத்தினர்.  அந்த சம்பவம் உறுதியானதால், ராயபுரம் அனைத்து மகளிர் காவல் துறையினர் விசாரணை செய்து லோகேஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். 

மீனாட்சி அம்மன் கோயில் அருகில் உள்ள கடையில் இருந்த 14 வயது சிறுமியிடம் செல்போனில் பேசி  3ஆண்டு பழக்கம் ஏற்பட்டது, அடிக்கடி சபரிமலைக்கு செல்லும் இவர்  5 மாதம் முன்பு சென்னைக்கு அழைத்து வந்து ரகசியமாக குடும்பம் நடத்தி வந்ததாகவும், 


இதற்கு உடந்தையாக லோகேஷின் தாய் கீதா செயல்பட்டதால் அவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சிறுமி காப்பகத்தில் விடப்பட்டுள்ளதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 இதனால்  லோகேஷ் மீது 2 கொலை வழக்குகள், கொலை முயற்சி, வழிப்பறி உட்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  

🙏முகக் கவசம் உயிர்க்கவசம்🙏