தமிழகம்-புதுச்சேரி போக்குவரத்து தொடக்கம்

 


தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு போக்குவரத்து தொடக்கம்


        இன்று முதல் பஸ்கள் தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு இயக்கப்பட உள்ளன.ஊரடங்கால், தமிழகம் -- புதுச்சேரி இடையே போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருந்தது.


தற்போது, தமிழகம், புதுச்சேரியில், கொரோனா தொற்று தாக்கம் கட்டுக்குள் உள்ளது. தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளன


மேலும்  சென்னை, விழுப்புரம், கடலுார், சீர்காழி, சிதம்பரம், நாகை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து புதுச்சேரிக்கும், காரைக்காலுக்கும் இன்று முதல் 150க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட உள்ளன. அதேபோல், புதுச்சேரி அரசும், தமிழகத்துக்கு 50 பஸ்களை இயக்க உள்ளது.


🙏முக கவசம் உயிர் கவசம்🙏