இன்று பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜரின் 119வது பிறந்தநாள்

 


      சென்னை: பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜரின் 119வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, கருப்பு காந்தி என்று மக்களால் பெருமையுடன் அழைக்கப்படும் கர்மவீரர் காமராஜரின் பிறந்தநாள்.


 இன்று கல்வி வளர்ச்சி நாளாகக் தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க ஸ்டாலின், எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட பல தலைவர்கள் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து கூறியுள்ளனர்.


காமராஜர் 1903 ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி விருதுநகரில் குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மாளுக்கு மகனாக பிறந்தார். 9 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராகப் பதவி வகித்த இவர் பொற்கால ஆட்சி நடத்தினார்.
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜரின் 119வது பிறந்த நாளையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள காமராஜரின் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்ட உருவப்படத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். 


இவரை தொடர்ந்து துணை சபாநாயகர் பிச்சாண்டி, அமைச்சர்கள் பொன்முடி, ரகுபதி, தா.மோ.அன்பரசன், சாமிநாதன், சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன், உள்ளிட்டோரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர் பாலு, ஆ.ராசா , தமிழச்சி தங்கபாண்டியன் ,தயாநிதி மாறன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் காமராஜருக்கு மரியாதை செலுத்தினர்.


🙏முக கவசம் உயிர்க்கவசம்🙏