ஒரு வரிச் செய்திகள்

 


   தமிழகத்தில் 49 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு


நெல்லை மாநகர காவல் ஆணையராக செந்தாமரை கண்ணன் நியமனம்


மத்திய மண்டல ஐ.ஜி.யாக பாலகிருஷ்ணன், மேற்கு மண்டல ஐ.ஜி.யாக சுதாகர், சுமித் சரன் ரயில்வே ஐ.ஜி.யாக நியமனம்



சிபிசிஐடி ஐ.ஜி.யாக ஜோஷி நிர்மல் குமார், வடக்கு மண்டல ஐ.ஜி.யாக சந்தோஷ் குமார் நியமனம்


திண்டுக்கல் டி.ஐ.ஜி., முத்துசாமி கோயம்புத்தூருக்கு இடமாற்றம்


👤கரோனா தொற்றால் புளியங்குடி டிஎஸ்பி உயிரிழப்பு: எஸ்.பி., காவல்துறையினர் அஞ்சலி


'👤தடுப்பூசி இல்லையென்றால், சம்பளமும் இல்லை': அரசு ஊழியர்களுக்கு அறிவித்த உ.பி. மாவட்ட நிர்வாகம்


👤ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கான நிலுவைத் தொகையை வழங்கினார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்


👤தமிழகத்தில் வேகமாக பரவிய கொரோனா அதே வேகத்தில் குறைந்து வருகிறது


- மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்


👤தடுப்பூசி செலுத்த ரூ.500 லஞ்சம் மருத்துவமனை ஊழியர்கள் 2 பேர் சென்னையில் கைது


👤ரூ.678.93 கோடி வங்கி மோசடி புகார்: குஜராத் எண்ணெய் நிறுவனம் மீது சிபிஐ வழக்குப்பதிவு


👤தமிழகத்திற்கு போதிய தடுப்பூசிகளை வழங்க வேண்டும் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்


👤தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்துவது குறித்து நிபுணர்கள், கல்வியாளர்களின் கருத்தை கேட்டு 2 நாட்களில் முடிவெடுக்கப்படும் - பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி


👤ராஜகோபாலன் அழித்த வாட்ஸ்அப் மெசேஜ் ஆதாரங்களை சைபர் ஆய்வகம் மூலம் மீட்டு, அந்த தகவல்களை வைத்தும் போலீசார் விசாரணை


விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய இருப்பதால், போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்


👤மருத்துவ உபகரணங்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து முழுமையாக வரி விலக்கு அளிக்க வேண்டும் - மத்திய அரசுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தல்



👤அயோத்தியில் மசூதி கட்டுவதற்கு வழங்கும் நன்கொடைகளுக்கு வரிவிலக்கு - மத்திய அரசு


                             நிருபர், தினேஷ்