நீட் தேர்வு - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

 


       நீட் தேர்வு - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு


நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்ததை எதிர்த்த வழக்கில் மத்திய - மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குழு அமைக்க உச்ச நீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டதா என கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம், நீட் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது என கூறியுள்ளது.


                 *************

நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டினால் தாஹ்மஹாலாக இருந்தாலும் இடிக்கப்படும் - ஐகோர்ட்


நாகையில் நீர் நிலைகளை ஆக்கிரமித்து ரயில்வே சுரங்கப் பாதை அமைப்பதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டினால் அது தாஹ்மஹாலாக இருந்தாலும் இடிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளது.


🙏முக கவசம் உயிர் கவசம்🙏