இன்று ஒரு சமையல் குறிப்பு

 


  சமையல் குறிப்பு  


வல்லாரை கீரை சாதம்


வல்லாரை கீரை உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. அதிலும் பள்ளி செல்லும் குழந்தைகள் இதனை அதிகம் சாப்பிட்டால், ஞாபக சக்தி அதிகரிக்கும். இப்போது வல்லாரை கீரை சாதம் எப்படி எளிதாக செய்வதென்று பார்ப்போம்.


தேவையான பொருட்கள் :-


வல்லாரை கீரை - 1 கட்டு


வடித்த சாதம் - 3 கப்


பெரிய வெங்காயம் - 1


பச்சை மிளகாய் - 3


இஞ்சி விழுது - அரை டீஸ்பு ன்


கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பு ன்


உப்பு - தேவைக்கேற்ப


எண்ணெய் - தேவைக்கேற்ப


கடுகு - அரை டீஸ்பு ன்


கறிவேப்பிலை - 1 கொத்து


செய்முறை :-


👉 வல்லாரைக் கீரை, பச்சை மிளகாய் ஆகியவற்றை விழுதாக அரைக்கவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயத்தை வதக்கி தனியாக வைத்துக் கொள்ளவும். கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். 


👉 இஞ்சி விழுது மற்றும் அரைத்த விழுதை அதில் சேர்த்து கிளறவும். பின் உப்பு, கரம் மசாலா, வதக்கிய வெங்காயத்தையும் சேர்த்து கிளறவும்.


👉 இதனுடன் வடித்த சாதத்தையும் சேர்த்து கிளறி விடவும். இப்போது சுவையான வல்லாரை கீரை சாதம் தயார்


அன்புடன்


கார்த்திகா