இன்றைய ராசிபலன் 28.6.2021 ஆனி ( 14 ) திங்கட்கிழமை.!!
மேஷம்
மேஷம்: பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழைய கடனில் ஒருபகுதியைப் பைசல் செய்வீர்கள். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபா ரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிறப்பான நாள்.
ரிஷபம்
ரிஷபம்: எதிர்பார்த்த இடத்தி லிருந்து நல்ல செய்தி வரும். பயணங்கள் சிறப்பாக அமையும். பழைய நண்பர்கள் உறவினர்கள் தேடி வந்து உதவுவார்கள். வியாபாரத்தில் சில நுணக்கங்களை கற்று கொள்வீர்கள். உத்தியோகத்தில் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். முயற்சியால் பலிதம் ஏற்படும் நாள்.
மிதுனம்
மிதுனம்: வர வேண்டிய பணம் கைக்கு வரும். புண்ணிய ஸ்தலங் கள் சென்று வருவீர்கள். கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண் டாகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபா ரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோ கத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக் கும். புதிய அத்தியாயம் தொடங்கும் நாள்.
கடகம்
கடகம்: சந்திராஷ்டமம் இருப்பதால் ஒரே நாளில் முக்கிய மான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் மறதியால் பிரச்சனை வரக்கூடும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.
சிம்மம்
சிம்மம்: மனைவி வழி உறவினர்களின் ஆதரவு பெருகும். வெளிவட் டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். தாயார் ஆதரித்துப் பேசுவார். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
கன்னி
கன்னி: உறவினர் நண்பர்களில் சிலர் உங்கள் உதவியை நாடுவார் கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர் கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரண மாக முடிப்பீர்கள். தொட்டது துலங்கும் நாள்.
துலாம்
துலாம்: உங்களை சுற்றில் இருப்பவர்களின் சுயரூபத்தை உணர்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனைவாகும் நாள்.
விருச்சிகம்
விருச்சிகம்: தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். புது வேலை அமையும். எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சினை தீரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.
தனுசு
தனுசு: விருந்தினர்கள் வருகை உண்டு. அரசால் ஆதாயம் உண்டு. புது வாகனம் வாங்கு வீர்கள். குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடை வார்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். தைரியம் கூடும் நாள்.
மகரம்
மகரம்: நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். உறவினர்கள் மதிப்பார்கள். குடும் பத்தில் கலகலப்பான சூழல் உரு வாகும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். உற்சாகமான நாள்.
கும்பம்
கும்பம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுவீர்கள். அடுத்தவர்கள் மனசு காயம்படி பேச வேண்டாம். புது முதலீடுகளை தவிர்க்கவும். வியாபாரத்தில் எதிர் பார்த்த பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.
மீனம்
மீனம்: மறைமுக விமர்சனங்களும் தாழ்வுமனப்பான்மையும் வந்து நீங்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்து போங்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். திடீர் பயணங்கள் உண்டு. வியாபாரத்தில் எதிர்ப்புகளையும் தாண்டி லாபம் சம்பாதிப்பீர்கள். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து போகும். திடீர் திருப்பம் உண்டாகும் நாள்..
*சுபம்*
வடிவமைப்பு திருமதி மோகனா செல்வராஜ்
🙏முகக் கவசம் உயிர்க்கவசம்🙏