ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கினார் ஆர்.கே. நகர் எம்எல்ஏ

 


  இன்று(07-06-21) வடசென்னை கிழக்கு மாவட்டம் ஆர்.கே நகர் 2வது சர்க்கிள் 47வது வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் AICC உறுப்பினர் ராஜேந்திரகுமார் ஜெயின் அவர்கள் ஏற்பாட்டில் ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எம்.எஸ்.திரவியம், ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் J.J.எபிநேசர் அவர்களும் கலந்து கொண்டு அன்னதானம் வழங்கினர். 
இந்நிகழ்ச்சியில் திமுக பகுதி செயலாளர் ஜெபதாஸ் பாண்டியன், காங்கிரஸ் சர்க்கிள் தலைவர் D.K.மூர்த்தி, வட்ட தலைவர்கள் பிரபா, டில்லிராஜ், வினாயகமூர்த்தி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் வரதராஜிலு, தலித் முருகேசன், திருப்பால், ஜான்பால் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.