சர்வதேச யோகா தினம்-பிரதமர் மோடி உரை

 சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நோய்நாடி நோய் முதல்நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல் என்னும் திருக்குறளை மேற்கோள் காட்டி பிரதமர் மோடி அவர்கள் உரையாற்றியுள்ளார்.

இன்று உலகம் முழுவதிலும் ஏழாவது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தலைநகர் டெல்லியில் நடக்கும் சர்வதேச யோகா தின கொண்டாட்டம் காலை 6 மணிக்கு தூர்தர்ஷன் டிவி சேனல்களில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

மேலும், ஆரோக்கியத்திற்கான யோகா எனும் தலைப்பில் இந்த ஆண்டு யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையடுத்து பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று காலை சிறப்புரையாற்றியுள்ளார்.

அப்போது பேசிய அவர், “நோய்நாடி நோய் முதல்நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்” எனும் திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசியுள்ளார். 

மேலும் உலக மக்கள் அனைவரும் நலமுடன் வாழ விரும்புவதாகவும், ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு நாட்டு மக்களும் ஆரோக்கியமாக இருக்க பிரார்த்திக்கிறேன் எனவும் இந்த கொரோனா பரவும் காலத்தில் யோகா நம்பிக்கை ஒளியாக திகழ்வதாகவும் கூறியுள்ளார்.


   🙏முக கவசம் உயிர் கவசம்🙏