மின் நுகர்வோர் சேவை மையம் திறப்பு

 



    *மின் நுகர்வோர் சேவை மையம் திறப்பு*


*சென்னை அண்ணா சாலையில் மின் நுகர்வோர் சேவை மையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்*


*மின்சாரம் சார்ந்த புகார்களை நுகர்வோர் குறை தீர்க்கும் மையத்தில் கூறலாம்*


*94987 94987 என்ற செல்போன் எண்ணில், மின் நுகர்வோர் சேவை தொடர்பாக பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.*


பொதுமக்கள் அளிக்கும் புகார்களை பெற்று, சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள மின்விநியோக அலுவலகங்களுக்கு தெரிவித்து, குறைகளை களைய நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் ஒருங்கிணைந்த முறையில் புகார்களுக்குத் தீர்வு காணப்படும். 


மின் நுகர்வோர் சேவை மையத்தை 94987 94987 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்கலாம். 1912 என்ற எண்ணில் தொடர்பு கொள்வதில் குறைபாடுகள் இருப்பதால் இந்த புதியஎண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 


எனினும் நுகர்வோர் 1912 எண்ணை தொடர்பு கொண்டால், அந்த அழைப்பு புதிய எண்ணுக்கு மாற்றம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.