10 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மீண்டும் இயக்கம்- தெற்கு ரெயில்வே அறிவிப்பு

 


        10 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மீண்டும் இயக்கம்- தெற்கு ரெயில்வே அறிவிப்பு*


தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-


பயணிகள் வரத்து குறைவால் ரத்து செய்யப்பட்ட கீழ்க்கண்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மீண்டும் இயக்கப்படுகிறது.


சென்னை எழும்பூர்-தஞ்சாவூர் (வண்டி எண்: 06865), எழும்பூர்-கொல்லம் (06101), சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரல்-திருவனந்தபுரம் (02695), எம்.ஜி.ஆர் சென்ட்ரல்-ஆலப்புழா (02639), எம்.ஜி.ஆர் சென்ட்ரல்-மேட்டுப்பாளையம் (02671), எழும்பூர்-ராமேஸ்வரம் (06851), கோவை-நாகர்கோவில் (02668), திருவனந்தபுரம்-மதுரை (06343), மதுரை-புனலூர் (06729), திருச்சி-எழும்பூர் (02654) ஆகிய தற்காலிகமாக ரத்து செய்யப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வருகிற 20-ந்தேதி முதல் மீண்டும் இயக்கப்படுகிறது.


தஞ்சாவூர்-எழும்பூர் (06866), கொல்லம்-எழும்பூர் (06102), திருவனந்தபுரம்-எம்.ஜி.ஆர். சென்ட்ரல் (02696), ஆலப்புழா-எம்.ஜி.ஆர் சென்ட்ரல் (02640), மேட்டுப்பாளையம்-எம்.ஜி.ஆர். சென்ட்ரல் (02672), ராமேஸ்வரம்-எழும்பூர் (06852), நாகர்கோவில்-கோவை (02667), மதுரை-திருவனந்தபுரம் (06344), புனலூர்-மதுரை (06730), எழும்பூர்-திருச்சி (02653) ஆகிய தற்காலிகமாக ரத்து செய்யப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வருகிற 21-ந்தேதி முதல் மீண்டும் இயக்கப்படுகிறது.

                          *********

      🙏முக கவசம் உயிர் கவசம்🙏