துணை மருத்துவமனைகள் துவங்கப்படும்: அமைச்சர் P.K.சேகர்பாபு பேட்டி

 


   சென்னை கீழ்ப்பாக்கம், அண்ணாநகரில் 2 நாளில் துணை மருத்துவமனைகள் துவங்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு பேட்டிசென்னை கீழ்ப்பாக்கம், அண்ணாநகரில் 2 நாளில் துணை மருத்துவமனைகள் துவங்கப்படும் என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேட்டியளித்துள்ளார். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் 100 படுக்கை வசதிகளுடன் துணை மருத்துவமனைகள் தொடங்கப்பட்டு வருகின்றன என்று தெரிவித்துள்ளார். ஸ்டான்லி மருத்துவமனைக்கு அருகே அமைந்துள்ள பாரதி மகளிர் கல்லூரி வளாகத்தில் அமையப் பெறவுள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு மற்றும் தயாநிதி மாறன் எம்பி ஆய்வு மேற்கொண்டனர் அப்போது உடன் ஸ்டான்லி மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் பாலாஜி அவர்கள் , மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.