இன்றைய ராசிபலன்

 

   


     

      *சனிக்கிழமை ராசி பலன்* 


(29-05-2021)

 

மேஷம்

இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளின் உதவியால் நல்ல லாபம் அடைவீர்கள். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். சேமிக்கும் அளவிற்கு வருமானம் பெருகும். புதிய தொழில் தொடங்குவதற்கான திட்டங்கள் நிறைவேறும். எந்த வேலையிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். ரிஷபம்

உங்கள் ராசிக்கு *சந்திராஷ்டமம் இருப்பதால் சுபகாரியங்களை தவிர்க்கவும்*. இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும். பணிபுரிபவர்களுக்கு வேலையில் நிதானம் வேண்டும். வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பயணங்களைத் தவிர்த்து விடவும். மிதுனம்

இன்று உங்களுக்கு பண புழக்கம் அதிகமாகும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும். நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சினைகள் குறையும். சுப பேச்சுக்கள் நற்பலனை தரும். தொழில் வியாபாரத்தில் லாபம் பெருகும். கணவன் மனைவி இடையே அந்நியோன்னியம் அதிகரிக்கும். கடகம்

இன்று பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். உற்றார் உறவினர்களுடன் இருந்த பிரச்சினைகள் குறைந்து ஒற்றுமை நிலவும். கடன் பிரச்சினை நீங்கும். சிம்மம்

உடன் பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். இன்று எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் உங்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். கன்னி

சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று பிள்ளைகளிடம் வீண் மன ஸ்தாபங்கள் ஏற்படும். செய்யும் செயல்களில் தாமதம் உண்டாகும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படலாம். சிக்கனமாக செயல்படுவது அவசியம். பொறுப்புடன் செயல்பட்டால் வியாபாரத்தில் நஷ்டத்தைத் தவிர்க்கலாம். துலாம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வீட்டில் பெரியவர்களின் அன்பை பெறுவீர்கள். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் நற்பலன்கள் கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலப்பலன் கிட்டும். வங்கி சேமிப்பு உயரும். விருச்சிகம்

மதிநுட்பத்துடன் செயல்பட்டால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற சூழ்நிலை நிலவும். நண்பர்களுடன் மனக்கசப்பு ஏற்படலாம். உடலில் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். உடல் வலிகள் வந்து நீங்கும். பண செலவு அதிகரிக்கும் வங்கி சேமிப்பு குறையும். உறவினர்கள் கை கொடுத்து உதவுவார்கள். தனுசு

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். நவீனகரமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெரியவர்களின் அறிவுரை வியாபார முன்னேற்றத்திற்கு உதவும். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். மகரம்

வேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். தொழில் வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். இன்று குடும்பத்தில் தேவையில்லாத செலவுகள் தோன்றும். உடன் பிறந்தவர்களிடையே ஒற்றுமை குறையும். பெண்களுக்கு பணிச்சுமை அதிகமாகும் கவனம் தேவை. கும்பம்

இன்று குடும்பத்தோடு பயணம் செல்லும் வாய்ப்பு ஏற்படும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். வருமானம் இரட்டிப்பாகும். வெளிவட்டார நட்பு கிடைக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். பழைய கடன்கள் வசூலாகும். பண வரவு அதிகரிக்கும். மீனம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். உடல் ஆரோக்கியம் சீராகும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் கிடைக்கும். இன்று உங்களுக்கு சுப செலவுகள் ஏற்படும். உறவினர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மறையும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். சுறுசுறுப்பு அதிகரிக்கும்.


                            *சுபம்*


        வடிவமைப்பு திருமதி மோகனா செல்வராஜ்