நடிகை முன்னாள் அதிமுக அமைச்சர் மீது காவல் ஆணையரிடம் புகார்

         முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் தன்னை ஏமாற்றி 5 ஆண்டுகள் குடும்பம் நடத்தி விட்டு ஆபாச படங்களைக் காட்டி மிரட்டுகிறார் என்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் துணை நடிகை சாந்தினி புகார் அளித்துள்ளார்.                            

 

மலேசியாவை சேர்ந்தவர் நடிகை சாந்தினி. நாடோடிகள், படத்தில் அறிமுகமானவர், 2ஜி ஸ்பெக்ட்ரம் படத்திலும் நடித்துள்ளார்.


முந்தைய அதிமுக ஆட்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேர் ஆளுநரிடம் மனு அளித்தனர். இதனால் அவர்கள் பதவி பறிக்கப்பட்டது.  அதனால் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக இருந்த மணிகண்டனின்பதவி பறிக்கப்பட்டது. கட்சிப் பணிகளிலும் தள்ளி வைக்கப்பட்டார்  தற்போது நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கூட மணிகண்டனுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.தற்போது தன்னுடன் பல ஆண்டுகளாக குடும்பம் நடத்திவிட்டு திருமணம் செய்யாமல் ஏமாற்றுவதாக நடிகை சாந்தினி புகார் அளித்துள்ளார். தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டால், அந்தரங்க புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டுகிறார் என்றும் கூலிப்படையை வைத்து கொலை செய்துவிடுவதாகவும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மிரட்டுகிறார். என்னை முன்னாள் அமைச்சரான மணிகண்டன் பாலியல் வன்புணர்ச்சி செய்தார்.  என்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து தொடர்பில் இருந்ததார்.


தற்போது மணிகண்டன் என்னை திருமணம் செய்ய மறுப்பதோடு, புகைப்படங்களை காட்டி சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டுகிறார். எனவே எனது தொடர்பான அந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை அவர் அழிக்க வேண்டும். அத்தோடு அவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். 


               நிருபர். கார்த்திக்