ஒரு வரிச் செய்திகள்

 


    👉கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் விற்றால் குண்டர் சட்டம் பாயும் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதிரடி உத்தரவு


👉சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் கொரோனா நிவாரண தொகை வழங்கும் திட்டத்தை திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.


👉விடுதலை சிறுத்தைகள் கட்சி பொருளாளர் முகமது யூசுப் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தார்.


👉கொரோனா நிவாரணமாக ₹2000 வழங்கும் பணியை கோவையில் உணவு மற்றும் உணவு வழங்கல் அமைச்சர் சக்கரபாணி துவங்கி வைத்தார்.


👉நாட்டில் அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த பிரதமர் மோடி

இன்று அவசர ஆலோசனை .

 கொரோனா தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்துவது பற்றியும் உயர்மட்ட

அதிகாரிகளுடன் ஆலோசிக்கிறார்.

கிராமப்புறங்களில் வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ள பிரதமர் மோடி உத்தரவு!


👉ஆல்பாஸ் என்பதைவிட மாணவர்களின் எதிர்கால நலனே முக்கியம்: அமைச்சர் அன்பில் மகேஷ்


👉முழுஊரடங்கான நாளை (மே 16) ரேஷன் கடைகளில் ரூ.2,000 கொரோனா நிவாரண நிதி பெற்றுக்கொள்ளலாம்


👉கொரோனா நிவாரண நிதியாக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கினார் இயக்குநர் ஷங்கர்


👉ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவிச்சந்திரன் கொரோனா நிவாரண நிதியாக ரூ.5,000 வழங்கினார்


👉நடிகர் பவுன்ராஜ் மறைவுக்கு சூரி இரங்கல்.👉பாஜக அரசின் விளையாட்டுக்கு மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் பலியாகக் கூடாது; தடுப்பூசி விஷயத்தில் உண்மையை கூற வேண்டும்" - கோவிஷீல்டு தடுப்பூசியின் 2 டோஸ்களுக்கு இடையேயான கால இடைவெளி மீண்டும் அதிகரிப்பு குறித்து காங்கிரஸ் எம்.பி. ப.சிதம்பரம் கேள்வி*


👉புனேவில் இருந்து 6 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி சென்னை வந்தது

கொரோனா தடுப்பூசி மாநில மருந்து சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது


👉ஃபெப்சி தொழிலாளர்களுக்கு நடிகர் அஜித் ரூ.10 லட்சம் நிதியுதவி 

அளித்துள்ளார்

- ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி👉டெல்லியில் கொரோனா பாதிப்பு விகிதம் 11% ஆக குறைந்துள்ளது - முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்


👉அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மூத்த ஆலோசகராக ஏற்கனவே ஒபாமாவுக்கு ஆலோசகராக இருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த நீரா தாண்டன் நியமனம்.