இரு வரி செய்திகள்


 ரேசன் கடைகள் நாளை (மே-25) முதல் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை செயல்படும் - தமிழக அரசு.


தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ரேஷன் கடைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி.
பழனி பெத்தநாயக்கன்பட்டி நரிக்குறவர் காலனியில் உள்ளவர்களுக்கு உணவு பொட்டலங்களை தர்ம சக்கர அறக்கட்டளை மூலம் திண்டுக்கல் சரக டிஐஜி முத்துசாமி ஐபிஎஸ் 250 நபர்களுக்கு வழங்கினார்


😡தமிழக அரசு சார்பில் இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் மூலம் நேற்று மாலை வரை 

6.60 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்


சென்னையில் இருந்து மட்டும் 65,746 பேர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்


- போக்குவரத்துத்துறைகேரளா இடுக்கி மாவட்டம் தேவிகுளம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வழக்கறிஞர் A.ராஜா தனது தாய்மொழி தமிழில் உறுதிமொழி ஏற்றார் மதுரையில் விமானத்தில் திருமணம் நடந்த விவகாரத்தில் விசாரணைக்கு உத்தரவிட்டது, மத்திய விமான போக்குவரத்து துறை இயக்குநரகம் 


திருமணம் நடந்த விமானத்தின் ஊழியர்கள் அனைவரும் தற்காலிக இடைநீக்கம்
மதிமுக துணைப் பொது செயலாளர் துரை பாலகிருஷ்ணன் குரானா தொற்றால் உயிரிழப்பு.கள்ளக்குறிச்சி சன் டிவி நிருபர் கணேசமூர்த்தி

 கொரோனாவால் உயிரிழப்பு.
இளம் செய்தியாளர் பிரதீப் கொரோனாவுக்கு பலியானார்!


இளம் செய்தியாளர் பிரதீப்( தி ஹிந்து- சென்னை) கொரோனாவால் பாதிக்கப்பட்டு அரசு கீழ்பாக்கம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.


 நேற்றிரவு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
 இவர் மறைவு  பத்திரிகை உலகில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 2014 ல் தன் 22 ம் வயதில் பத்திரிகை உலகில் இணைந்தார் பிரதீப்.


 பிரதீபுக்கு விரைவில் திருமணம் செய்விக்க அவருடைய குடும்பத்தார் முயற்சி எடுத்து வந்தனர்.

 சமூக ஆர்வம் கொண்ட ஒரு சிறந்த செய்தியாளரை இழந்துவிட்டோம் உறவுகளே! கவனமாக இருங்கள்!!.


😡கொரோனாவுக்கு தஞ்சை நீதிபதி பலி* 


தஞ்சாவூர் மாவட்ட நீதிபதி நிலையில் உள்ள மக்கள் நீதிமன்ற நிரந்தர  தலைவர் தூத்துக்குடியை சேர்ந்த நீதிபதி வனிதா(55) மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார்


                 நிருபர் ,பாலாஜி