இன்றைய ராசிபலன்

           இன்றைய (09-05-2021) ராசி பலன்கள்


மேஷம்


வேலைவாய்ப்புகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். எதிர்பாராத கடன் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். வாழ்க்கை பற்றிய புதிய கண்ணோட்டம் உண்டாகும்.ரிஷபம்


மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். உடைமைகளில் கவனம் வேண்டும். கால்நடைகள் தொடர்பான வியாபாரத்தில் ஆதாயம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுக்கிடையே அனுசரித்து செல்லவும்.


மிதுனம்


கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பழைய நண்பர்களின் சந்திப்பால் மகிழ்ச்சி உண்டாகும். சொத்துக்கள் தொடர்பான விவாதங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். உறவினர்களின் வருகையால் மனமகிழ்ச்சி அடைவீர்கள்.
கடகம்


வாகனங்களால் எதிர்பார்த்த தொழில் லாபம் உண்டாகும். தொழில் சம்பந்தமான கடன் உதவிகள் கிடைக்கும். தலைமைப் பதவி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய வீடு வாங்குவதற்கான முயற்சிகள் ஈடேறும். அரசாங்க பணிகளால் மகிழ்ச்சி உண்டாகும்.


சிம்மம்


புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தனவரவுகள் தாராளமாக இருக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழல் அமையும்.


கன்னி


செய்யும் பணிகளில் கவனமாக இருக்க வேண்டும். வார்த்தைகளில் பொறுமை வேண்டும். சுயதொழிலில் மந்தமான லாபம் கிடைக்கும். மனதில் அஞ்ஞான சிந்தனைகள் மேலோங்கும். எதிர்பார்த்த முடிவுகளில் காலதாமதம் ஏற்படும்.


துலாம்


புதிய திட்டம் ஒன்றை வகுத்து அதை செயல்படுத்த முயல்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும். மனதில் தோன்றும் தேவையற்ற சஞ்சல எண்ணங்களால் மனவருத்தங்கள் உண்டாகும். இளைய உடன்பிறப்புகளால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
விருச்சகம்


பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த பிரச்சனைகள் குறைந்து சுமூகமான சூழல் ஏற்படும். பொதுத்தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்தி உண்டாகும். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு அலைச்சல்கள் ஏற்பட்டாலும் சாதகமான சூழல் ஏற்படும்.தனுசு


மூத்த சகோதரர்களால் தனலாபம் ஏற்படும். கலைஞர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். வெளியூர் பயணங்களினால் மேன்மையான சூழல் உண்டாகும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். பொருட்சேர்க்கை உண்டாகும்.மகரம்


கால்நடைகளால் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். தாய்வழி ஆதரவினால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். மனைகளில் புதிய வீடு கட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உடல் உபாதைகள் நீங்கி ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்கும்பம்


பொதுக்காரியங்களில் ஈடுபடுவதால் நற்பேறுகள் கிடைக்கும். இஷ்ட தெய்வங்களை வணங்குவீர்கள். தொழிலில் இருந்துவந்த மறைமுக எதிரிகளை கண்டு அவர்களின் திட்டங்களை களைவீர்கள். நிர்வாகத்தில் சில மாற்றங்களை நிகழ்த்துவீர்கள்.மீனம்


கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமூகமான சூழல் உண்டாகும். வர்த்தகப் பணிகள் சம்பந்தமான புதிய சிந்தனைகள் தோன்றும். எதிர்பாராத பரிசுகளால் மனமகிழ்ச்சி உண்டாகும். உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும்.

                            *சுபம்*

     வடிவமைப்பு .திருமதி மோகனா       செல்வராஜ்