ஒரு வரிச் செய்திகள்

 


             👤மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இல்லத்திற்கு சென்று வாழ்த்து பெற்ற உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ மற்றும் அன்பில் மகேஷ் எம்.எல்.ஏ உடன் இருந்தார்.

சாலிகிராமம் இல்லத்தில் விஜயகாந்த்துடன் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு

விஜயகாந்த்தின் உடல்நலம் குறித்து உதயநிதி ஸ்டாலின் கேட்டறிந்தார்


👤தேர்தலில் தோல்வி அடைந்தது ஏன் என்பது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் ஆலோசனை 

கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தேர்தலில் போட்டியிட்டோர் ஆலோசனையில் பங்கேற்பு

கட்சியை சீரமைக்கும் பணி உடனே தொடங்கும்; அது கடுமையாகவும் இருக்கும் - கமல்

மு.க.ஸ்டாலினுடன் கமல் சந்திப்பு


👤புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியலை ஆளுநரிடம் வழங்கினார் தலைமைத்தேர்தல் அதிகாரி


👤முக்குலத்தோர் சமூகத்தை புறக்கணித்ததால் அ.தி.மு.க. தோல்வி - கருணாஸ் பேட்டி


👤ஐதராபாத்தில் உள்ள விலங்கியல் பூங்காவில்  8  சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி


👤மதுரையிலிருந்து தேர்தல் பணி முடிந்து சொந்த ஊர் திரும்பிய மத்திய பாதுகாப்பு படையினர் தாங்கள் சமைத்த உணவுகளை ரயில்வே நிலையத்தில் இருந்த சாலையோர மக்களிடம் வழங்கிச் சென்ற நெகிழ்ச்சி சம்பவம்.


👤திருச்சியில் இறந்த ஆட்டை சமைப்பதற்காக வாங்கி வந்த தகராறில் தம்பியை குத்தி கொலை செய்த அண்ணன்


👤தனியார் பேருந்துகள் 6ம் தேதியிலிருந்து நிறுத்தம்! 50% பயணிகளை அனுமதிப்பது அவர்களுக்கு கட்டாது என்பதால்


👤ஜே.இ.இ நுழைவுத்தேர்வுகள் ஒத்திவைப்பு - மத்திய கல்வித்துறை அமைச்சர்  

ஏப்ரல் மாத தேர்வு ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மே மாத தேர்வும் ஒத்திவைப்பு


👤சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்


👤 அம்மா உணவகத்தை சேதபடுத்திய 2 கட்சி நிர்வாகிகள் நீக்கம். மீண்டும் அதே இடத்தில் அம்மா உணவகம் போர்ட்டு மாட்ட ஸ்டாலின் உத்தரவு


👤செங்கல்பட்டு அருகே கருங்குழிபள்ளத்தில் 105 ஏக்கர் 

அரசு நிலத்தை தனியாருக்கு 

பட்டா போட்டுக் கொடுத்தவர்கள்

மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.