தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று 2வது அலை காரணமாக சென்னை எழும்பூரில் உள்ள காவலர் மருத்துவமனை (26-05-21) தேதி முதல் கொரோனா வார்டாக செயல்பட உள்ளது.
சென்னை பெருநகர காவல் ஆணையர் கட்டுப்பாட்டின் கீழ் பணிபுரியும் காவலர்கள், அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் இந்த மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை வழங்கப்படும். இந்த காவலர் மருத்துவமனையில் புற நோயாளிகள் பிரிவு கடந்த 19ம் தேதி முதல் எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்திற்கு மாற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.