தாய் தந்தையை இழந்த குழந்தைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் உதவி தொகை

 


கொரோனா தொற்றால் தாய் தந்தையை இழந்த குழந்தைகளுக்கு PM Cares மூலம் ரூ.10 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார்.


கொரோனாவால் தந்தை மற்றும் தாய் ஆகியோரை இழந்த குழந்தைகளுக்கு PM Cares மூலம் ரூ.10 லட்சம் வங்கி வைப்பு நிதியாக வழங்கப்படும் என பிரதமர் மோடி உத்தரவு . பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 18 வயதை அடைந்ததும் மாதம் ₹ 2000 ஊக்கத்தொகை வழங்கப்படும்.

கேந்திர வித்யாலயா பள்ளிகளில் இலவச கல்வி அளிக்கவும் உத்தரவு.


மேலும் 23 வயதை அடைந்ததும் PM Caresல் இருத்து ரூ.10 லட்சம் அளிக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.



ஆதரவற்ற குழந்தைகளுக்கு நிவாரணம் முதல்வர் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!


👉🏼 கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைக்களுக்கு ரூ.5 லட்சம் வைப்பு நிதி. 18 வயது நிறைவடையும் போது, அந்த தொகை வட்டியுடன் வழங்கப்படும்.


👉🏼 பட்டபடிப்பு வரைக்குமான கல்வி கட்டணத்தை (விடுதிக் கட்டணம்) உட்பட அரசே ஏற்கும்.


👉🏼 கொரோனா நோய்த் தொற்றினால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளோடு இருக்கும் தந்தை அல்லது தாய்க்கு உடனடி நிவாரணத் தொகையாக 3,00,000 ரூபாய் வழங்கப்படும்.


👉🏼 அரசு காப்பகம் அல்லது விடுதிகளில் இல்லாது, உறவினர் / பாதுகாவலரின் ஆதரவில் வளரும் குழந்தைகளின் பராமரிப்புச் செலவாக, மாதந்தோறும் தலா 3 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை, அவர்கள் 18 வயது நிறைவடையும் வரையில் வழங்கப்படும்.


👉🏼 ஏற்கெனவே தாய் அல்லது தந்தையை இழந்து, தற்போது கொரோனா நோய்த் தொற்றினால் மற்றொரு பெற்றோரையும் இழந்த குழந்தைகளுக்கும் ரூபாய் 5 இலட்சம் அவர்களது பெயரில் வைப்பீடு செய்யப்படும்.


              🙏நிருபர். மணிவண்ணன்