முதலமைச்சராகப் பொறுப்பேற்க இருக்கிற ஆற்றலும், அனுபவமும் மிக்க திரு. மு.க ஸ்டாலின் அவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது தலைமையில் தமிழகம் தலைநிமிர்ந்து பீடுநடை போடும் என்கிற நம்பிக்கை அனைவருக்கும் இருக்கிறது. என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே எஸ் அழகிரி கூறினார்.
மண்ணைக் கவ்வியது சாதிய மதவாத சனாதனக் கும்பல்!
மகுடம் சூடியது மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி!
சனாதனத்தை வீழ்த்தி சனநாயகத்தைக் காப்பாற்றிய
தமிழக மக்களுக்கு நன்றி!
கூட்டணியை சிதற விடாமல் மாபெரும் வெற்றியை ஈட்டியிருக்கிறார் ஸ்டாலின்
ஊழலற்ற ஆட்சி நிர்வாகத்தை வழங்குவதே லட்சியம் என கூறியிருக்கிறார் ஸ்டாலின்
நல்லாட்சியை வழங்கக்கூடிய ஆற்றல் ஸ்டாலினுக்கு உண்டு
ஸ்டாலின் சந்திக்கக்கூடிய முதல் சவால் கொரோனா
திருமாவளவன்
வேளாண் சட்டங்கள், குடியுரிமை சட்டம், நீட், நிச்சயமாக எதிர்ப்போம்.
அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகள் வளர்ச்சி இல்லை, திமுக ஆட்சிக்கு வந்ததும் அனைத்தையும் சரி செய்ய வேண்டிய நிலை உள்ளது - நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி
இந்தியாவின் மொத்த பார்வையும் தமிழகம் பக்கம் உள்ளது
கொரோனா பற்றி மிகுந்த கவனத்துடன் இருக்கிறார் ஸ்டாலின்
தமிழக மக்களை பாதுகாப்பது எப்படி என்ற கவனத்துடன் இருக்கிறார் ஸ்டாலின்
தமிழகத்திற்கு இது ஒரு பொற்காலமாக அமைந்துள்ளது
வைகோ